under review

க்ரியா பதிப்பகம்

From Tamil Wiki
க்ரியா பதிப்பகம்

க்ரியா பதிப்பகம் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள பதிப்பகம். க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் ’தற்காலத் தமிழ் அகராதி’ உள்ளிட்ட பல நூல்களை எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பித்துள்ளார்.

பதிப்பகம் பற்றி

எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா) மனைவி ஜெயலட்சுமியுடன் இணைந்து 1974-ல் ‘க்ரியா பதிப்பகத்தை’ சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரில் தொடங்கினார். க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் ’தற்காலத் தமிழ் அகராதி’ உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். பதிப்புத்துறையில் பல்வேறு தொழில் நுட்பங்களைப் புகுத்தினார்.

வெளியீடுகள்

சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் என பல தலைப்புகளின்கீழ் இப்பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. 1978-ஆம் ஆண்டிலிருந்து இந்தி, வங்கமொழி, கன்னடம், என பல மொழிகளில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் வெளியிட்டது.

உலக இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளான லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’, ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’; மருத்துவ நூலான டேவிட் வெர்னரின் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’; தமிழ்க் கல்வெட்டியல் குறித்த ஆங்கில நூலான ஐராவதம் மகாதேவனின் ‘எர்லி தமிழ் எபிகிராஃபி’ என்று விரியும் ‘க்ரியா’வின் நூல் வரிசையில் வெளியானவைதான் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, அம்பையின் ‘வீட்டின் மூலையில் சமையலறை’, இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’, ந.முத்துசாமியின் ‘மேற்கத்திக் கொம்புமாடுகள்’, பூமணியின் ‘அஞ்ஞாடி’ போன்ற நூல்கள் க்ரியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன.

நூல்கள் பட்டியல்

 • காவிரி வெறும் நீரல்ல
 • நிரபராதிகளின் காலம்
 • போலி அடையாளம்
 • காகிதப் பாவைகள்
 • யாருக்கும் இல்லாத பாவை
 • இதுவரை
 • ரமாவும் உமாவும்
 • பருவநிலை மாற்றம்
 • மெர்சோ மறுவிசாரணை (காமெல் தாவுத்)
 • காவிரிக் கரையில் அப்போது
 • பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்
 • தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)
 • அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்)
 • அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
 • ஃபாரென்ஹீட் 451
 • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை
 • சாவு சோறு
 • The BBi Combinatory Dictionary of English
 • புதிய அலை இயக்குநர்கள்
 • குறுந்தொகை
 • பறவைகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)
 • தவளைக்கல் சிறுமி
 • பொடுபொடுத்த மழைத்தூத்தல்
 • தீமையின் மலர்கள்
 • சின்னச் சின்ன வாக்கியங்கள்
 • விசாரணை
 • கொலைச் சேவல்
 • ருபாயியத் - ஒமர் கய்யாம்
 • தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்
 • சின்னச் சின்ன வாங்கியங்கள்
 • செடல்
 • முத்தி
 • Social Dimensions of Modern Tamil
 • மேற்கத்திக் கொம்பு மாடுகள்
 • அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
 • க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம்
 • சித்து
 • சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை…
 • மழை மரம்
 • ழாக்ப்ரொவர் சொற்கள்
 • தாவோதேஜிங் லாவோட்சு
 • வீடியோ மாரியம்மன்
 • மாங்கொட்ட சாமி
 • அபாயம்
 • கடவு
 • கொண்டலாத்தி
 • zen awakening to your original face
 • zen heart, zen mind
 • பெத்தவன்
 • கோவேறு கழுதைகள்
 • நன்மாறன் கோட்டைக் கதை
 • மால்குடி மனிதர்கள்
 • அமைதி என்பது நாமே
 • காற்று, மணல், நட்சத்திரங்கள் (அந்த்லான் து செந்த் எக்கபெரி)
 • செல்லாத பணம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
 • எங் கதெ
 • நறுமணம்
 • மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்
 • வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)
 • Early Tamil Epigraphy
 • கூலித் தமிழ்
 • முதல் மனிதன்
 • அந்நியன்
 • லூயி மால்
 • நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்
 • An English Dictionary of the Tamil Verb
 • குட்டி இளவரசன்
 • மண் பாரம்
 • கீழை நாட்டுக் கதைகள்
 • ஆறுமுகம்
 • காண்டாமிருகம்

இணைப்புகள்


✅Finalised Page