தொல்காப்பியர் (இலக்கண நூல் ஆசிரியர்)
- தொல்காப்பியர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தொல்காப்பியர் (பெயர் பட்டியல்)
தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் தமிழில் கிடைத்துள்ள காலத்தால் முற்பட்ட இலக்கண நூலை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொல்காப்பியர் அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர் என்றும், காப்பியக் குடியில் பிறந்ததால் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்றும் இறையனார் களவுரை காலத்திலிருந்து கூறப்படும் கருத்து. தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினி என்றும், தந்தை பெயர் சமதக்கினி என்றும், தொல்காப்பியருடன் உடன் பிறந்தவர் பரசுராமர் என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் நம்பப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்னுமிடத்தில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
தொல்காப்பியரின் காலம்
தொல்காப்பியர் காலம் பற்றி தமிழ் இலக்கியச்சூழலில் தொடர் விவாதங்கள் நிகழ்ந்தபடி உள்ளன.
அறிஞர்கள் குறிப்பிடும் தொல்காப்பியரின் காலம்
- புன்னைவனநாத முதலியார் - 12000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
- கா. சுப்பிரமணிய பிள்ளை - பொ.மு. 700-ம் ஆண்டுக்குப் பிற்பட்டது
- மயிலை சீனி. வேங்கடசாமி - பொ.மு. 800
- எஸ் வையாபுரிப்பிள்ளை - பொ.யு. 500
- க.வெள்ளைவாரணர் - பொ.மு. 5000
உசாத்துணை
- பொதுநலம்.காம் -தொல்காப்பியர் வாழ்க்கை வரலாறு
- தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்; பதிப்பாசிரியர்: முனைவர் இரா.வெங்கடேசன்; வெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Apr-2023, 07:44:05 IST