under review

சித்த மருத்துவ இதழ்கள் பட்டியல்

From Tamil Wiki

தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவச் செய்திகளைத் தாங்கி வரும் இதழ்கள் சித்த மருத்துவ இதழ்கள் எனப்படுகின்றன. தமிழில் அச்சு நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலம் முதலே மருத்துவ நூல்களும் அச்சிடப்பட்டு வெளிவந்தன.

சித்த மருத்துவ இதழ்கள்

தமிழ் மருத்துவச் சுவடிகளில் இருந்த அகத்தியர் மருந்து தயாரிப்பு வகையை இலங்கையிலிருந்து பொ.யு 1841 முதல் வெளிவந்த உதயதாரகை இதழ் வெளியிட்டது. தொடர்ந்து பலரும் சித்த மருத்துவ, இயற்கை மருத்துவ நூல்களை அச்சிட்டு வெளியிட்டனர். தமிழின் முதல்‌ மருத்துவ இதழாக ’அகத்தியவர்த்தமானி' கருதப்படுகிறது. இது சென்னையிலிருந்து வெளிவந்தது. தொடர்ந்து பல மருத்துவ நூல்கள் வெளியாகின.

கீழ்காணும் இதழ்கள், சித்த மருத்துவச் செய்திகளைத் தமிழில் வழங்கின. இவற்றில் சில தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் வைத்தியக் களஞ்சியம் 1921
தன்வந்திரி 1923
ஆரோக்கிய தீபிகை 1924
மருத்துவன் 1928
வைத்தியக் களஞ்சியம் 1930
ஆரோக்கிய சிந்தாமணி 1930
வைத்தியன் 1931
சித்தர் களஞ்சியம் 1934
சித்தன் 1935
தமிழ் மருத்துவப் பொழில் 1941
அகஸ்தியன் 1944
அமுது 1952
நல வாழ்வு 1956
ஞானி வைத்திய செய்தி 1959
நந்தி 1962
மூலிகை மணி 1964
மூலிகை ரகசியம் 1965
முதல் சித்தன் 1966
கிராம வைத்தியம் 1965
தமிழ் முனிவன் 1971
செந்தமிழ் சித்தன் 1974
சுகவழி 1977
சித்தாலயா 1980
சித்தர் கருவூலம் 1981
மருத்துவ மஞ்சரி 1981
சித்த மருத்துவம் 1982
கண் ஒளி 1983
கற்பக அவிழ்தம் 1986
சித்தக் கருவூலம் 1987
சித்தர் செயல் 1989
உலக சேமம் 1989
வாழ்க நலமுடன் 1989
ஓம் சக்தி மருத்துவ மலர் 1990
தேனமுதம் 1995
சித்தா உலகம் 1995
நவபாஷாண மருத்துவம் 1995
ஜீவ மூலிகை 1996
மூலிகை மருத்துவம் 1996
தெய்வீக மருத்துவம் 1997
ஞான மருத்துவ மணி 1997
மூலிகை மலர் 1997
சித்தர் அறிவியல் 2000
மூலிகைக் குழந்தைகள் 2000
தமிழ் வைத்தியம் 2001
சித்தன் வாக்கு வெளியான ஆண்டினை அறிய இயலவில்லை
சித்தர் வழி வெளியான ஆண்டினை அறிய இயலவில்லை
சித்தன் குரல் வெளியான ஆண்டினை அறிய இயலவில்லை
சித்தன் செய்தி வெளியான ஆண்டினை அறிய இயலவில்லை

உசாத்துணை


✅Finalised Page