under review

நவீன இலக்கியம்

From Tamil Wiki
Revision as of 13:26, 20 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected link to MV Venkatram page)

நவீன இலக்கியம் என தமிழில் விமர்சகர்களால் வரையறுக்கப்படும் எழுத்து பல இயல்புகள் கொண்டது. வாசகனை நோக்கி கருத்துக்களை முன்வைத்து பேசுவது, அவனுடைய வாழ்க்கையனுபவங்களை துலக்குவது, அவனுடைய அழகுணர்வால் தொடர்புறுத்திக் கொள்வது நவீன இலக்கியத்தின் இயல்பு. வாசகனை மகிழ்விக்கும் நோக்கத்துடன் அதன் மொழியோ அமைப்போ கருத்தோ உருவாவதில்லை. ஆசிரியன் தன்னை தன் புனைவின் வழியாக வாசகனின் முன் வைப்பதற்கே நவீன இலக்கியத்தில் முயல்கிறான். தன் கருத்துக்களை முன்வைக்கலாம். தன் வாழ்க்கையனுபவ அறிதல்களைக்கொண்டு வாசகனின் வாழ்க்கையை துலக்கிக்காட்டலாம். மொழி, அமைப்பு, உணர்வுகள் ஆகியவற்றால் வாசகனின் அழகுணர்வுடன் உரையாடலாம். இப்பிரிவினையை அறுதியாகச் செய்ய முடியாது. எனினும் தமிழிலக்கியத்தை வகைப்படுத்திப் புரிந்துகொள்ள இப்பிரிவினை இன்றியமையாதது

பார்க்க: நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்


✅Finalised Page