under review

காலச்சுவடு பதிப்பகம்

From Tamil Wiki
Revision as of 15:47, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
காலச்சுவடு பதிப்பகம்

காலச்சுவடு பதிப்பகம் (1995) சென்னையிலிருந்து இயங்கிவரும் பதிப்பகம். இதன் நிர்வாக இயக்குநர் கண்ணன் சுந்தரம்.

தொடக்கம்

காலச்சுவடு பதிப்பகம் 1995-ல் தொடங்கப்பட்டது. இதன் நிர்வாக இயக்குநர் கண்ணன் சுந்தரம். காலச்சுவடு பதிப்பகம் தமிழ் நவீன இலக்கியத்தின் போக்குகள் சார்ந்த நூல்கள் பதிப்பிப்பதை நோக்கமாகக் கொண்டது.

வெளியீடுகள்

மொழியாக்கம்

  • உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளன. காலச்சுவடு பிரசுரித்துள்ள தமிழ்ப் படைப்புகள் இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • ஒரான் பாமுக், அருந்ததி ராய், ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி, ஆல்பர்ட் காம்யு, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், பிரான்சுவாஸ் சகன், ராபர்ட்டோ கலாஸ்ஸோ, ஜான் பான்வில், யோஸ்டைன் கார்டெர், லெ கிளேஸியோ, சில்வியா பிளாத், அய்ஃபர் டுன்ஷ், அலெசான்ட்ரோ பாரிக்கோ, எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஃப்ரன்ஸ் காஃப்கா, ஆல்பர் கமூய், டேவிட் கிராஸ்மன், மாயா ஆஞ்சலூ ஆகியோர் காலச்சுவடு தமிழில் மொழிபெயர்த்திருக்கும் உலக இலக்கியவாதிகளில் சிலர்.
  • பிரெஞ்சு, வெல்ஷ், ஸ்பானிஷ் (அர்ஜென்டீனா , கொலம்பியா) பராகுவே, ஃபின்னிஷ், துருக்கி, ப்ளெமிஷ், கட்டலன், அரபி, சீனம், ஹீப்ரு, ஆங்கிலம், ஐரிஷ், சிங்களம், நார்வேஜியன், ஜெர்மன், ஐஸ்லாண்டிக், ரஷ்யன் ஆகிய உலக மொழிகளிலிருந்தும், வங்காளம், கன்னடம், தெலுங்கு, கொங்கிணி, மணிப்பூரி, ஹிந்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும் மொழியாக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

செயல்பாடுகள்

  • 1998-ல் காலச்சுவடு நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவைச் சென்னையில் நடத்தியது. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் பெருந்திரளான வாசகர்களும் கலந்துகொண்ட வகையில் முக்கியமான வெளியீட்டு விழாவாக அமைந்தது.
  • படைப்பாளிகளை நினைவுகூர்தல்: மௌனி, க.நா. சுப்ரமணியன் முதலான படைப்பாளிகளின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் பல்வேறு கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் காலச்சுவடு நடத்தியது.
கருத்தரங்குகள்
  • 'தமிழ் இனி 2000' கருத்தரங்கம்: உலகம் எங்கிலும் இருக்கும் தமிழ் இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர். தமிழ் எழுத்தின் பல்வேறு வகைமைகள் தழுவிய கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. திராவிட இலக்கியம், தேசிய இலக்கியம், குழந்தை இலக்கியம், வெகுஜன இலக்கியம், இலக்கியச் சிற்றிதழ்கள் ஆகிய துறைகள் கவனம் பெற்றன. கருத்தரங்கின் முழுமையான பதிவுகளின் தொகுப்பு 2006-ல் வெளியானது.
  • 2005-ல் 'புத்தாயிரத்தில் தமிழ் நாவல்கள்' கருத்தரங்கம்.
  • 2006-ல் 'பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75' ஆகிய கருத்தரங்குகள்.
  • 2011-ல் 'சு.ரா. 80' கருத்தரங்கு.
  • 2024-ல் 'அம்பை 80' கருத்தரங்கு.

விருதுகள்

  • பப்ளிஷிங் நெக்ஸ்ட் (Publishing Next) எனும் பதிப்பாளர் அமைப்பு வழங்கும் சிறந்த இந்தியப் பதிப்பகத்திற்கான விருது (2018)
  • சிறந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளுக்காக வழங்கப்படும் ரொமைன் ரோலண்ட் விருது (2018)
  • இந்தியப் பதிப்பாளர் கூட்டமைப்பு (FIP) வழங்கும் சிறந்த புத்தகத் தயாரிப்புக்கான விருது (2019)
  • ஃபிரெஞ்ச் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது (2022). இவ்விருது பிரெஞ்சுப் பதிப்புத்துறை, இந்தியப் பதிப்புத்துறை இடையிலான பந்தங்களை மேம்படுத்தியதற்காக காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணனுக்கு வழங்கப்பட்டது.
  • பப்ளிஷிங் நெக்ஸ்ட் வழங்கும் சிறந்த இந்தியப் பதிப்பகத்திற்கான விருது (2023)

இணைப்புகள்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jan-2025, 17:38:10 IST