சித்ரா பாலசுப்ரமணியன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 58: | Line 58: | ||
*[https://youtu.be/t5j1L3_OeZc?si=A2pEh7wlCtlbPPI_ வரலாற்றில் காந்தியம் திருமாவளவனுடன் நேர்காணல், யூடியூப் காணொளி] | *[https://youtu.be/t5j1L3_OeZc?si=A2pEh7wlCtlbPPI_ வரலாற்றில் காந்தியம் திருமாவளவனுடன் நேர்காணல், யூடியூப் காணொளி] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|08-Sep-2025, 11:38:54 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 03:44, 9 September 2025
சித்ரா பாலசுப்ரமணியன்(பிறப்பு: நவம்பர் 8, 1969). கல்வியாளர், எழுத்தாளர். காந்தி குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். காந்தி குறித்த இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் இலக்கியம், காந்தியம் சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
பிறப்பு, கல்வி
சித்ரா , திருச்சி மாவட்டத்தில் நவம்பர் 8,1969-ல் பிறந்தார். தந்தை பத்மநாபன், தாய் சுந்தரவல்லி . தந்தை பத்மநாபன் , தமிழக அரசின் நிலஅளவீடு துறையில் பணியாற்றியவர்.
சித்ரா தொடக்கக் கல்வியை மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி, ஆலந்தூர் மாநகராட்சிப் பள்ளி, தி.நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்றார். இளங்கலை, முதுகலை( தமிழ் இலக்கியம்) கல்வியை , செல்லம்மாள் மகளிர்க் கல்லூரியில் பயின்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டம் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பெற்றார்.
தனி வாழ்க்கை
கணவர் பாலசுப்ரமணியன் கட்டடக்கலைப் பொறியாளர்.மகள் அநன்யா , அமெரிக்காவில் பன்னாட்டு பாதுகாப்பு ஆய்வாளர் (Global security Analyst )ஆகப் பணி புரிகிறார். மகன் ஈஷ்வர், வியாபாரத்துறை சார்ந்து பணியாற்றுகிறார். சித்ரா குடும்பத்தினருடன் சென்னை மயிலையில் வசிக்கிறார்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பதினான்கு வருடங்கள் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
ஊடகத்துறை
சித்ரா சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் , பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் (பகுதி நேரம்) இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார். சமுதாய வானொலியில் இரண்டாண்டு பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
காந்தி 150 கொண்டாட்டத்தின் போது ஏறக்குறைய ஒரு வருடம் முழுக்க , பொதிகைத் தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியாக காந்தி குறித்த தகவல்களைத் தொகுத்தளித்து, பதினாறு ஆளுமைகளிடம் காந்தி குறித்த நேர்காணல்களையும் நடத்தினார்.
இலக்கிய வாழ்க்கை
சித்ரா பாலசுப்ரமணியன் சிறு வயதிலிருந்து வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். புதுமைப்பித்தன்,அசோகமித்திரன், தி.ஜானகிராமன் ,ஆதவன், சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ஜே.பி.சாணக்யா, சூடாமணி, அம்பை, ,பெருந்தேவி, நகுலன், சுகுமாரன், தேவதச்சன், பெருமாள் முருகன், அரவிந்தன் , ஸ்டாலின் ராஜாங்கம் போன்றோரைத் தன் ஆதைச எழுத்தாளுமைகளாகக் குறிப்பிடுகிறார். வரலாறு, பண்பாட்டு மானிடவியல், மொழிபெயர்ப்பு, கட்டுரை நூல்கள், மகாத்மா காந்தியின் எழுத்துகள் ,சங்க இலக்கியம் ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாடும் தீவிர வாசிப்பும் கொண்டவர்.
தண்டி யாத்திரை குறித்த 'மண்ணில் உப்பானவர்கள்', 16 காந்திய ஆளுமைகளுடன் நடத்திய நேர்காணல்களின் நூல் வடிவமான 'செயலறம்' இரு நூல்கள் வெளிவந்துள்ளன.
காந்தியின் தீண்டாமைக்கு எதிரான பயணம் குறித்தும் , காந்தியின் நவகாளி யாத்திரை குறித்துமான நூலாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இலக்கியம் சார்ந்த ஊடகப்பணிகள்
கிழக்குப் பதிப்பகத்தின் ஆடியோ புத்தக வரிசையில் இரண்டு புத்தகங்களும் ஸ்டோரிடெல் (Storytel) அமைப்பில் ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள்(God of small things), பெருமகிழ்வின் பேரவை(The Ministry of Utmost Happiness) இரு நூல்களையும் ஒலிப்புத்தகங்களாக்கினார்.
சங்க இலக்கியத்தை முழுமையாக் கற்க வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவர். நித்யாவுடன் இணைந்து'Sanga Ilakiyam' 2021 என்ற யூடியூப் அலைவரிசை மூலமாக சங்க இலக்கியத்தையும் பிற தமிழ் இலக்கியங்களையும் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். குறுந்தொகை(முழுமையும்) நாலடியார் ( முழுமையும்) சிலப்பதிகாரம் ( முழுமையும்) மலைபடுகடாம், முல்லைப்பாட்டு, பெரியாழ்வார் திருமொழி, பாஞ்சாலி சபதம், சகலகலாவல்லி மாலை, நற்றிணை ஆகிய நூல்களைக் கற்பிக்கும் காணொளிகளை வெளியிட்டார்.
மதிப்பீடு
“ சித்ரா பாலசுப்ரமணியன் மண்ணில் உப்பானவர்கள் தொகுப்பில் உப்பு அரசியல் ஆயுதமாக மாறி நின்றதையும் அந்த மாற்றம் எப்படி நேர்ந்தது என்பதை நமக்குக் காட்சிப் படுத்தியுள்ளார். வெறும் எண்பது பேர்களை மட்டும் கொண்ட நடைப் பயணம் எதைச் சாதிக்கப் போகிறது என்று அலட்சியமாக ஒதுக்கித் தள்ளியவர்களெல்லாம் வியப்போடு பார்க்கும் வகையில் உருமாறிய அரசியல் விசித்திரத்தை சித்ரா தன் நூல் வழியாக இன்றைய தலைமுறையைச் சேர்ந்த புதிய வாசகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். காந்தி எதைச் சாதித்தார்,எப்படிச் சாதித்தார் என்னும் கேள்விகளுக்கான விடைகளைச் சித்ராவின் சித்திரிப்புகள் வழங்குகின்றன” என எழுத்தாளர் பாவண்ணன் மண்ணில் உப்பானவர்கள் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
செயலறம் நூல் குறித்து எழுத்தாளர் அரவிந்தன், “ காந்தியைப் பற்றிய விவாதங்களுக்குப் பஞ்சம் இல்லை. மத ஒற்றுமை,இட ஒதுக்கீடு,சனாதனம், தீண்டாமை,பொருளாதாரம், சுற்றுச் சூழல் ,நேர்மை, அமைதி எனப் பல்வேறு விவாதங்களிலும் காந்தி தொடர்ந்து இடம்பெறுகிறார்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த,காந்தியை ஆழ்ந்து கற்ற ஆளுமைகள் காந்தியை விரிவாகப் பேசும் இந்த நூல் பல பிரச்சினைகளிலும் தெளிவைத் தருகிறது. காந்தியைப் பற்றி மேலும் படிப்பதற்கான தேடலையும் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக,காந்தி எனும் உணர்வைப் புரிந்துகொள்ள உதவுகிறது “ எனத் தன் முன்னுரையில் எழுதியுள்ளார்.
உரை
காந்தி, காந்தியம், காந்தியர் குறித்து முக்கியமான நூல்கள் குறித்து தக்கர்பாபா மையத்தில் இயங்கும் காந்தி ஸடெடி சென்டரில் தொடர்ந்து பல்வேறு உரைகள் நிகழ்த்தியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணாக்கரிடையே காந்தி குறித்து பேசி வருகிறார்.
விருது
- மதுரையைச் சேர்ந்த Centre for Experiencing Socio Cultural Interaction (CESCI) 2021-ல் சிறந்த சமூக ஊடகவியலாளர் என்ற பிரிவில் MAJA KOENE விருது வழங்கியது.
நூல்கள்
- மண்ணில் உப்பானவர்கள். (தண்டி யாத்திரையை தொடர்பானது)
- செயலறம் (பதினாறு ஆளுமைகளின் காந்தி தொடர்பான நேர்காணல்களின் தொகுப்பு).
இணைப்புகள்
- மாமனிதர் மகாத்மா || தூர்தர்ஷன் உரையாடல்-யூடியூப் காணொளி
- வணக்கம் பொதிகை நம் விருந்தினர் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் யூடியூப் காணொளி
- மாமனிதர் மகாத்மா 20 - 09 - 2019 தூர்தர்ஷன் உரையாடல், யூடியூப் காணொளி
- குறுந்தொகை தொடர் வகுப்பு - 2 - சித்ரா பாலசுப்பிரமணியம், யூடியூப் காணொளி
- புத்தரும் அவர் தம்மமும் சித்ரா பாலசுப்ரமணியன் உரை | Gandhi Study Centre, யூடியூப் காணொளி
- தமிழகத்தில் ஆசீவகம் உரை யுடியூப் காணொளி
- வரலாற்றில் காந்தியம் திருமாவளவனுடன் நேர்காணல், யூடியூப் காணொளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2025, 11:38:54 IST