ஜி.குப்புசாமி
- குப்புசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குப்புசாமி (பெயர் பட்டியல்)
ஜி.குப்புசாமி (ஆகஸ்ட் 4, 1962) இலக்கிய மொழிபெயர்ப்பாளர், கட்டுரை எழுத்தாளர். ஆங்கிலம் வழியாகத் தமிழில் ஐரோப்பிய இலக்கியங்களையும் இந்திய-ஆங்கில எழுத்துக்களையும் மொழியாக்கம் செய்பவர். ஓரான் பாமுக், அருந்ததி ராய் படைப்புகளின் இவரது மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை.
பிறப்பு, கல்வி
ஜி.குப்புசாமி ஆரணியில், ஆகஸ்ட் 4, 1962 அன்று எம்.கணேசன் - விஜயலட்சுமி இணையருக்கு பிறந்தார். பள்ளிப்படிப்பு ஆரணியில் நிறைவுற்றபின் கல்லூரி படிப்பை வேலூரிலும், பின்பு சென்னையிலும் முடித்தார்.
தனி வாழ்க்கை
ஜி.குப்புசாமி 2005-ம் ஆண்டு நர்மதாவை மணந்தார். நர்மதா குப்புசாமி ஓர் இலக்கிய விமர்சகர். பிரசன்ன வெங்கடேஷ் என ஒரு மகன். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஜி. குப்புசாமி தன் மொழியாக்கங்களுக்காகவே அறியப்படுகிறார். தன் மொழியில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். அவரது முதல் மொழியாக்கம் குஜராத் மதக் கலவரம் பற்றிய அருந்ததி ராயின் கட்டுரை, மே 2002-ல் பிரசுரமாகியது.[1]
அருந்ததி ராய், துருக்கிய எழுத்தாளர் ஒரான் பாமுக் இருவரின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்ததில் ஜி.குப்புசாமியின் பங்களிப்பு முக்கியமானது.
’அயல் மகரந்தச் சேர்க்கை’ என்ற மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணல்கள் மற்றும் சிறுகதைகள் தொகுப்பில் பல்வேறு நாட்டின் சிறுகதை எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு[2], ’பனி[3]’, ’இஸ்தான்புல்’, ’வெண்ணிறக் கோட்டை ஆகிய துருக்கி நாவல்களை ஆங்கில மூலத்திலிருந்து மொழியாக்கம் செய்தார்.
மொழிபெயர்ப்பு குறித்தும், மொழிபெயர்ப்பாளர்கள் குறித்தும் கட்டுரைகள், நேர்காணல் அளித்துவருகிறார். ஜி.குப்புசாமி, நடிகர் கமல்ஹாசன் நடத்தும் கமல் பண்பாட்டு மையத்துடன் இணைந்து செப்டெம்பர் 26-27, 2024 இரு நாட்கள் மொழிபெயர்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்து தமிழ் திசை, காலச்சுவடு, ஆனந்த விகடன், புது எழுத்து, கனலி போன்ற அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது படைப்புகளும், தூர்தர்ஷன் தமிழ் போன்ற தொலைக்காட்சி ஊடகங்களில் இவரது நேர்காணல்களும் வெளியாகியுள்ளன.
இலக்கிய இடம்
ஜி. குப்புசாமியின் மொழியாக்கத்தில் ஜான் பான்வில்லின் ( The sea, John Banvill) 'கடல்' மற்றும் அருந்ததி ராயின் ’சின்ன விஷயங்களின் கடவுள்' (God of small things, Arundati Roy) இரு மொழியாக்கங்களும் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தன. ஓரான் பாமுக்கின் துருக்கி மொழி நாவல்களின் மொழியாக்கங்கள் மூலம் அந்த நிலத்தையும், வாழ்வியலையும் தமிழில் அறிமுகப்படுத்தினார். சமகால உலகச் சிறுகதைகளையும் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
”தமிழுக்குப் பெரும் பங்களிப்பாற்றியிருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் வரிசையில் வைக்கவேண்டிய முக்கியமான மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி” என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
’சின்ன விஷயங்களின் கடவுள்’ நூலின் மொழியாக்கம் குறித்து "இன்று நமக்கிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களில், நம்பகமான மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் ஜி.குப்புசாமி" என காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியர் கவிஞர் சுகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.[4]
சர்வதேச அழைப்புகள்
அயர்லாந்து எழுத்தாளர் ஜான் பான்வில்லின் 'கடல்’ நாவலின் மொழிபெயர்ப்பு பணிக்காக, அந்நாட்டின் இலக்கிய வளர்ச்சித்துறையினால் (Ireland Literature Exchange) 2009-ம் ஆண்டு டப்ளின் நகரில் ஒரு மாத காலத்திற்கு (ஏப்ரல் 28 - மே 28) சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
ஸ்காட்லாந்து எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்டின் (Douglas Stuart)புக்கர் பரிசு பெற்ற 'ஷகி பெய்ன்'(Shuggy Bain) நாவலின் தமிழ் மொழியாக்கப் பணிகளுக்காக, அந்நாட்டின் கிளாஸ்கோ நகரில் உள்ள 'கோவ் பார்க்’ எனும் சர்வதேச எழுத்தாளர் உறைவிட முகாமிற்கு 2023-ம் ஆண்டு ஜூலை ஆகஸ்ட் இரு மாதங்களுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டார்.[5]
விருதுகள்
- 2009 - Literature Ireland Bursary
- 2012 - ஜி. யூ. போப் மொழிபெயர்ப்பு விருது (SRM பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம்)
- 2012 - டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் விருது (கனடா)
- 2018 - தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
நேர்காணல்கள்
- தி ஹிந்து (ஆங்கிலம்)[6]
- இந்து தமிழ் திசை[7] [8]
- காலச்சுவடு[9][10]
- சாகித்ய அகாடமி[11]
- கனலி[12]
- தூர்தர்ஷன் தமிழ்[13]
- அனைத்திந்திய வானொலி[14][15]
- வாசகசாலை[16]
- மதிமுகம்[17]
- கிழக்கு பதிப்பகம் (கருத்தரங்கம்)[18]
நூல் பட்டியல்
மொழியாக்கங்கள்
நாவல்கள்
- சின்ன விஷயங்களின் கடவுள் (அருந்ததி ராய், 2012)
- பெருமகிழ்வின் பேரவை (அருந்ததி ராய், 2021)
- என் பெயர் சிவப்பு (ஓரான் பாமுக், 2009)
- பனி (ஓரான் பாமுக்,2013)
- இஸ்தான்புல் (ஓரான் பாமுக்,2014)
- வெண்ணிறக் கோட்டை (ஓரான் பாமுக்,2015)
- கடல் -(ஜான் பான்வில், 2014)
- உடைந்த குடை -( தாக் ஸூல்ஸ்தாத் ,2017)
சிறுகதைத் தொகுப்புகள்
- நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது (ஹாருகி முரகாமி,2014)
- பூனைகள் நகரம் (ஹாருகி முரகாமி, 2016)
- நாளை வெகுதூரம் (15 உலக சிறுகதைகளின் மொழியாக்கம், 2007)
- வணக்கத்துக்குரிய எலும்புத் துண்டுகள் (பெர் லாகர்குவிஸ்ட் ,2016)
- அந்திராகம் - (இஷிகுரோ, குந்தர் கிராஸ் & காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் 2021)
- இருட்டியபின் ஒரு கிராமம் (20 சமகால உலக சிறுகதைகளின் மொழியாக்கம் ,2022)
கட்டுரைத் தொகுப்பு
- ஆஸாதி (அருந்ததி ராய், 2022)[19]
நேர்காணல்கள், சிறுகதைகள் & கட்டுரைகள்
- கனவுகளுடன் பகடையாடுபவர் (2011)
- அயல் மகரந்தச் சேர்க்கை (2016)
பயணக்குறிப்பு
- சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை - (அல்பெர்தோ கிரனாடோ ,2016)
கட்டுரைத் தொகுப்புகள்
- மூன்றாவது கண் (2022)
- காலத்தை இசைத்த கலைஞன்: இளையராஜா 80 (2022)
- கண்ணாடிச் சொற்கள் (2023)
உசாத்துணை
- ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு சிறுகதைகள்-சிறுகதைகள்.காம்
- அயல் இலக்கியமும் ஆறு மொழிபெயர்ப்பாளர்களுள்-டைம்ஸ் ஆஃப் இண்டியா , சமயம்
- என் ஊர் - குற்றங்கள் இல்லாத குறையில்லா பூமி !-ஆனந்த விகடன் நேர்காணல்
- மேற்கின் புகைப்படம்-ஜெயமோகன்
இணைப்புகள்
- காலச்சுவடு இணையதளம் - மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் - ஜி.குப்புசாமி
- சந்தேகத்தின் பலன்-டோபியாஸ் உல்ஃப், தமிழில் : ஜி. குப்புசாமி
- ஜி.குப்புசாமி படைப்புகள்-கனலி இதழ்
- இந்து தமிழ் திசை-ஜி.குப்புசாமி கட்டுரைகள்
- காலச்சுவடு-ஜி.குப்புசாமி கட்டுரைகள்
- க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள் (அழியாச் சுடர்கள் - 2012)
- என் பெயர் சிவப்பு - விமர்சனம்-க.சீ.சிவகுமார் (வலைப்பூ, 04.02.2021)
- புதுமைப்பித்தன் நினைவு விருது (ஷ்ருதி டீவி காணொளி - 2015)
- கண்ணாடிச் சொற்கள் (காலச்சுவடு இதழ் - ஜன 2019)
- காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும் (காலச்சுவடு இதழ் - ஜனவரி 2021)
- குறுகத் தரித்தவரா கார்வர்? (அருஞ்சொல் இணையதளம் - 30.09.21)
- எப்படி இருக்கப்போகிறது எதிர்காலம்? (காலச்சுவடு இதழ் - ஜன 2022)
- நூல் அறிமுகம்: ‘மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்’ (Book Day - பாரதி புத்தகாலயம் - 17.03.23)
- லண்டன் மனிதர்கள் (காலச்சுவடு இதழ் - நவ. 2023)
- எழுத்தாளர் விட்டல் ராவ் எனும் பல்துறை வித்தகர் - ஜி.குப்புசாமி (யூடியூப் காணோளி, 15.01.24)
- பயணத்தின் சுவடுகள் (காலச்சுவடு இதழ் - செப். 2024)
அடிக்குறிப்புகள்
- ↑ இந்தியாவில் ஜனநாயகம் என்னவாக இருக்கிறது - அருந்ததி ராய் - தமிழில்: ஜி. குப்புசாமி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியீடு)
- ↑ என் பெயர் சிவப்பு: ஒரு நுண்ணோவியத்தின் கதை - நாகரத்தினம் கிருஷ்ணா(திண்ணை இணையதளம், 19.06.2011)
- ↑ ஓரான் பாமுக்கின் பனி (விமர்சனம் இணையதளம், 20.05.2021)
- ↑ சின்ன விஷயங்களின் கடவுள் நூல் குறித்து கவிஞர் சுகுமாரன் - (காலச்சுவடு, செப் 2012)
- ↑ Funded Residencies: Kuppuswamy Ganesan (Covepark Official Website, 2023)
- ↑ Translation is a challenge, as more works are made into Tamil with a boom in publishing (The Hindu, 31.01.24)
- ↑ நான் நாவல் எழுத மாட்டேன் (தி இந்து தமிழ் - நேர்காணல், 2015)
- ↑ வாசிப்பில்தான் புத்தகத்தின் வெற்றி முழுமையடைகிறது (தி இந்து தமிழ் - நேர்காணல், 2018)
- ↑ கண்ணாடியைப் பார்ப்போம் - அ. முத்துலிங்கம் (காலச்சுவடு - இதழ் 150)
- ↑ ஜி.குப்புசாமி அவர்களுடன் சா. தேவதாஸ் நிகழ்த்திய நேர்காணல் (காலச்சுவடு, ஏப் 2022)
- ↑ சாகித்ய அகாடமியின் இணைய வழி இலக்கியத் தொடர் - கலந்துரையாடல் (யூடியூப், 13.06.2020)
- ↑ கனலி இணையதளம் - ஜி.குப்புசாமி நேர்காணல் (16.06.2020) - பகுதி 1 & பகுதி 2
- ↑ தூர்தர்ஷன் தொலைக்காட்சி - நம் விருந்தினர் - ஜி,குப்புசாமி
- ↑ "இலக்கியம் பேசுவோம்" - தனது மொழிபெயர்ப்புகள் குறித்து ஜி.குப்புசாமி (அனைத்திந்திய வானொலி, 21.08.2023)
- ↑ மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பங்கேற்ற நேர்முகம் (புதுவை வானொலி, 03.01.2020)
- ↑ தொடுவானத்தைத் தீண்டத் துடிக்கும் ஆர்வம் - நேர்காணல் (வாசகசாலை, 17.12.2018)
- ↑ நான் பார்த்து வியந்த சேகுவேரா (மதிமுகம் தொலைக்காட்சி, 20.11.2021)
- ↑ மொழிபெயர்ப்புக் கருத்தரங்கம் (கிழக்கு பதிப்பகம், 31.05.2014)
- ↑ வதைக்கப்பட்ட நகரங்களின் மீது எந்த மொழியில் மழை பொழிகிறது? -நூலறிமுகம் (அருஞ்சொல், 20.02.2022)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:31 IST