சமணர்களின் தமிழ்க் கொடை
From Tamil Wiki
சமணர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பங்களிப்புக்களைத் தந்துள்ளனர். இலக்கியம், இலக்கணம், புராணங்கள், நீதி நூல்கள், சதகங்கள், கணித நூல்கள், ஜோதிடம் என்று அவர்கள் தமிழுக்கு அளித்த கொடை மிகப் பெரிது.
சமணச் சான்றோரின் தமிழ் நூல்கள்
சமணச் சான்றோர் இயற்றியதாகக் கருதப்படும் தமிழ் நூல்களின் பட்டியல்
இலக்கியம்/இலக்கணம்/புராணம்/நீதி நூல் |
1. பேரகத்தியம் |
2. தொல்காப்பியம் |
3. திருக்குறள் |
4. சிலப்பதிகாரம் |
5. சீவக சிந்தாமணி |
6. நரி விருத்தம் |
7. சூளாமணி |
8. பெருங்கதை |
9. வளையாபதி |
10. மேருமந்தர புராணம் |
11. நாரதர் சரிதம் |
12. சாந்தி புராணம் |
13. உதயண குமார காவியம் |
14. நாக குமார காவியம் |
15. கலிங்கத்துப் பரணி |
16. யசோதர காவியம் |
17. இராம காதை |
18. கிளி விருத்தம் |
19. எலி விருத்தம் |
20. இளந்திரையம் |
21. புராணசாகரம் |
22. அமிர்தபதி |
23. மல்லிநாதர் புராணம் |
14. பிங்கல சரிதை |
25. வாமன சரிதை |
26. வர்த்தமானம் |
இலக்கணம் |
1. நன்னூல் |
2. நம்பியகப்பொருள் |
3. யாப்பருங்கலம் |
4. யாப்பருங்கலக் காரிகை |
5. நேமிநாதம் |
6. அவிநயம் |
7. வெண்பாப் பாட்டியல் |
8. சந்தநூல் |
9. இந்திர காளியம் |
10. அணியியல் |
11. வாய்ப்பியம் |
12. மொழிவரி |
13. கடிய நன்னியம் |
14. காக்கைப்பாடினியம் |
15. சங்க யாப்பு |
16. செய்யுளியல் |
17. நக்கீரர் அடிநூல் |
18. கைக்கிளைச் சூத்திரம் |
19. நத்தத்தம் |
20. தக்காணியம் |
நீதி நூல்கள் |
1. நாலடியார் |
2. பழமொழி நானூறு |
3. ஏலாதி |
4. சிறுபஞ்சமூலம் |
5. திணைமாலை நூற்றைம்பது |
6. ஆசாரக்கோவை |
7. அறநெறிச்சாரம் |
8. அருங்கலச்செப்பு |
9. ஜீவ சம்போதனை |
10. ஒளவை (அகத்தில்சூடி) |
11. நான்மணிக்கடிகை |
12. இன்னா நாற்பது |
13. இனியவை நாற்பது |
14. திரிகடுகம். |
தர்க்க நூல்கள் |
1. நீலகேசி |
2. பிங்கலகேசி |
3. அஞ்சனகேசி |
4. தத்துவ தரிசனம் |
இசை நூல்கள் |
1. பெருங்குருகு |
2. பெருநாரை |
3. செயிற்றியம் |
4. பரத சேனாபதியம் |
5. சயந்தம் |
6. இசைத்தமிழ் செய்யுட் கோவை |
7. இசை நுணுக்கம் |
8. சிற்றிசை |
9. பேரிசை |
நாடக நூல்கள் |
1. குணநூல் |
2. அகத்தியம் |
3. கூத்தநூல் சந்தம் |
ஓவிய நூல்கள் |
1. ஓவியநூல் |
2. கலைகோட்டுத் தண்டம் (நிகண்டனார் இயற்றியது) |
நிகண்டுகள் |
1. சூடாமணி நிகண்டு |
2. திவாகர நிகண்டு (திவாகரம்) |
3. பிங்கல நிகண்டு (பிங்கலாந்தை) |
கணித நூல்கள் |
1. கெட்டி எண்சுவடி |
2. கணக்கதிகாரம் |
3. நல்லிலக்க வாய்ப்பாடு |
4. சிறுகுழி வாய்ப்பாடு |
5. கீழ்வாய் இலக்கம் |
6. பெருக்கல் வாய்ப்பாடு |
7. அவினந்த மாலை |
சோதிட நூல்கள் |
1. ஜினேந்திரமாலை |
2. உள்ளமுடையான் |
பிரபந்தங்கள் |
1. தோத்திரத் திரட்டு |
2. திருக்கலம்பகம் |
3. திருநூற்றந்தாதி |
4. சமண திருவெம்பாவை(அவிரோதி ஆழ்வார்) |
5. திருப்பா மாலை |
6. திருப்புகழ்ப் புராணம் |
7. ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் |
8. அப்பாண்டைநாதர் உலா |
9. திருமேற்றிசையந்தாதி |
10. தர்மதேவி அந்தாதி |
11. திருநாதர் குன்றத்துப் பத்துப் பதிகம் |
சதகங்கள் |
1. கொங்கு மண்டல சதகம் |
2. நேமிநாத சதகம் |
இப்பட்டியலில் பல நூல்கள் வழக்கொழிந்து விட்டன. உரையாசிரியர்களின் மேற்கோள்கள் மூலம் அவை அறியப்பட்டன.
உசாத்துணை
- தமிழரசு தீபாவளி மலர், 1974
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Mar-2023, 16:40:49 IST