விஷ்ணுபுரம் இலக்கிய விருது

From Tamil Wiki
Revision as of 23:42, 11 May 2022 by Navingssv (talk | contribs) (Created page with "thumb|''விஷ்ணுபுரம் விருது கேடயம்'' விஷ்ணுபுரம் இலக்கிய விருது, விஷ்ணுபுரம் வட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமையை மரியாதை செய்யும் வக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
விஷ்ணுபுரம் விருது கேடயம்

விஷ்ணுபுரம் இலக்கிய விருது, விஷ்ணுபுரம் வட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமையை மரியாதை செய்யும் வகையில் வழங்கும் எழுத்தாளுமைக்கான விருது.

நோக்கம்

அரசு சார்ந்த அமைப்புகளாலும், கல்வி நிறுவனங்களாலும் கௌரவிக்கப்படாத மூத்த தமிழ் படைப்பாளிகளை கவுரவிப்பதே இவ்விருதின் நோக்கம்.

விருது

2010 இல் ஐம்பதாயிரம் ரொக்கப் பணமும், கேடயமும் ஆக இருந்த விருது 2013 இல் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது. 2021 இல் விருது தொகை இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டு, தற்போது இரண்டு லட்ச ரூபாய் நினைவுத் தொகையும், கேடயமும் வழங்கப்படுகிறது.

எழுத்தாளரின் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு விருது விழாவிற்கு முன் வெளியிடப்படும். விருது பெறும் எழுத்தாளரைப் பற்றிய நூல் ஒன்றும் விழாவில் வெளியிடப்படும். பரிசு பெறும் படைப்பாளியை முன்வைத்து இரண்டு நாள் இலக்கிய விழா நிகழும் (பார்க்க: விஷ்ணுபுரம் இலக்கிய விழா). தமிழ் இலக்கியத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் பலருடன் கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டு இரண்டு நாள் விழாவாக நடத்தப்படுகிறது.

இதன் அமைப்பாளராக கே.வி. அரங்கசாமி உள்ளார். விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2016 முதல் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Vishpuram.jpg

விருது பெற்றோர்

நூல்கள்

ஒவ்வொரு விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டியும் விருது பெறுபவரைப் பற்றிய விமர்சன நூல் ஒன்று வெளியிடப்படும். முதல் சில விழாக்களில் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் எழுதிய வெளிவந்த விமர்சன நூல், பின்னால் வாசகர்கள் பலர் சேர்ந்து எழுதும் விமர்சன நூலானது.

நடுவே ஞானக்கூத்தன் விருதுபெற்றபோது ஆவணப்படம் எடுத்தமையால் விமர்சனநூல் வெளியிடப்படவில்லை. பின்னர் விமர்சனநூலும் ஆவணப்படமும் இருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி  ஆகியோர் அயல்நிலத்துப் படைப்பாளிகள் என்பதனால் அவர்களின் புனைவுநூல் ஒன்று இங்கே விமர்சனநூலுக்கு பதிலாக வெளியிடப்பட்டது.

ஆவணப்படங்கள்

சிறப்பு விருந்தினர்கள்

வெளி இணைப்புகள்