under review

கிழார்ப் பெயர்பெற்றோர் புலவர் வரிசை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
Line 69: Line 69:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 19:30, 23 December 2022

சங்கப்பாடல்களில் கிழார்ப் பெயர் பெற்ற புலவர்களை 'கிழார்ப் பெயர்பெற்றோர்' என்ற தலைப்பில் புலவர் கா. கோவிந்தன் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 8-ல் தொகுத்தார்.

கிழார்ப் பெயர்பெற்றோர்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடிய புலவர்களுள் பலருக்கு 'கிழார்’ என்ற சிறப்புப் பெயர் இருந்தது. தொல்காப்பியத்தின் வழி கிழார் என்பது வேளாளரைக் குறிக்கும் சொல் என அறிய முடிகிறது. திருத்தொண்டர் புராணம் பன்னிரெண்டாம் செய்யுளிலும் இதற்கான சான்றுகள் உள்ளன. கிழார் பெயர் கொண்ட நாற்பத்தியொரு புலவர்களை புலவர் கா. கோவிந்தன் வகைப்படுத்தியுள்ளார்.

இலக்கணம்
  • தொல்காப்பியம்

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே
அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன்
என்பன வேளார்க்குறியன

சான்று
  • திருத்தொண்டர் புராணம்: 12

நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும்
நற்குடி நாற் பத்தெண்ணா யிரத்து வந்த
கூடைக்கிழான், புரிசைக்கிழான், குலவுசீர்வெண்
குளப்பாக் கிழான் வரிசைக் குளத்து ழான்முன்
தேடுபுக ழாரிவரும் சிறந்து வாழச்
சேக்கிழார் குடியிலிந்தத் தேச முய்யப்
பாடல்புரி அருண்மொழித்தே வரும்பின் நந்தம்
பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்

கிழார்ப் பெயர்பெற்ற புலவர்கள்

உசாத்துணை


✅Finalised Page