ஆவூர் கிழார்
- ஆவூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆவூர் (பெயர் பட்டியல்)
- கிழார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிழார் (பெயர் பட்டியல்)
To read the article in English: Avur Kizhar.
ஆவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
ஆவூர் தஞ்சையிலும் (மருதத்திணை), திருவண்ணாமலையிலும் (முல்லைத்திணை) உள்ளது. இவர் பாடிய பாடலில் இரு திணைகளும் இருப்பதால் இவர் பிறந்த இடம் இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம என தமிழறிஞர்கள் கருதுகின்றனர். இவர் மகன் கண்ணனாரும் சங்கப்புலவரே.
இலக்கிய வாழ்க்கை
முல்லைத்திணைப் பாடலான 322-வது புறநானூற்றுப் பாடலை இவர் பாடினார். "வல்லாண்முல்லை" என்ற துறை தழுவிய வேந்தரும் அஞ்சும் வீரனது சிறப்பை இப்பாடலில் பாடினார்.
பாடல் வழி அறியும் செய்திகள்
- வரகுக் கொல்லையைச் சூழ அமைந்த கள்ளி வேலி
- கரும்பாலைகள் கரும்பாட்டும் ஒலி கேட்டு நீர் நிலையிலுள்ள வாலை மீன்கள் துள்ளிக் குதிக்கும் மருத நிலக் காட்சி
பாடல் நடை
- புறநானூறு: 322
உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்,
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்,
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது,
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண்பணை யாளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:59 IST