under review

மிளைகிழான் நல்வேட்டனார்

From Tamil Wiki

மிளைகிழான் நல்வேட்டனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல்கள் நற்றிணையில் நான்கும், குறுந்தொகையில் ஒன்றும் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

நல்வேட்டனார் அல்லது மிளைகிழான் நல்வேட்டனார் என்றும் அழைப்பர். மிளை என்னும் ஊரில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் ஐந்திணைகளிலும் பாடல்கள் இயற்றியுள்ளார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • நன்செய் நிலத்தில் விதைக்க விதை கொண்டு சென்ற கூடை நிறைய அந்நிலத்திலிருந்து மீன்கள் அள்ளிக் கொண்டு வரும் சித்திரம் உள்ளது.
  • சான்றோர்க்கு செல்வம் என்பது தம்மை அடைந்தார் துயர் கண்டு அஞ்சி, அதைப் போக்கி, எவரிடத்திலும் வன்சொல் வழங்காது இன்சொல் வழங்களும் என்று பாடினார்.

பாடல் நடை

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

உசாத்துணை


✅Finalised Page