under review

கருவூர் கிழார்

From Tamil Wiki

To read the article in English: Karuvoor Kizhar. ‎


கருவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

சேரர்களின் தலைநகராக இருந்த கருவூரில் பிறந்தார். இன்றைய கரூர் மாவட்டமே கருவூர் என வழங்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

குறுந்தொகையின் 17-ஆவது பாடல் கருவூர் கிழார் பாடியது. குறிஞ்சித்திணைப்பாடல். "தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை யாற்றாளெனக் கவலையுற்ற தோழிக்கு, ’தலைவனது நட்புக் கெடாதென்பதை யான் அறிந்துள்ளேன்; பலர் தமக்குத் தோற்றியவற்றைச் சொல்லுவர். அதனால் யான் உறுதி நீங்கேன்’ என்று தலைவி கூறியது" என்ற துறையின் கீழ் உள்ளது. எருவை என்னும் நீர்வாழ் செடியை யானை விரும்பி உண்ணும்; அதன் பூ நீண்ட குச்சியில் கொத்தாகப் பூத்திருக்கும் என்ற செய்தியை பாடல்வழி அறியலாம்.

பாடல் நடை

  • குறுந்தொகை - 170

பலவும் கூறுகவ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.

உசாத்துணை


✅Finalised Page