under review

மாடலூர் கிழார்

From Tamil Wiki

மாடலூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத் தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மாடலூரில் பிறந்தார். இதன் தற்போதைய இடம் அறிய இயலவில்லை. கிழார் என்பது சிறப்புப் பெயர்.

இலக்கிய வாழ்க்கை

குறிஞ்சித்திணையில் இரவுக்குறிக்கு இசைந்து வந்து நிற்கும் தோழியிடம் தன் இசைவினைத் தெரிவிக்கும் தலைவியின் கூற்றாக குறிஞ்சித்திணைப் பாடலாக குறுந்தொகையில் ஒரு பாடல் பாடினார்.

பாடல் நடை

சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்

உசாத்துணை


✅Finalised Page