மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்
From Tamil Wiki
- மருதங்கிழார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மருதங்கிழார் (பெயர் பட்டியல்)
மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரையில் மருதங்கிழாரின் மகனாகப் பிறந்தார். சங்கப் புலவர் சோகுத்தனாரின் உடன் பிறந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடிய பாலைத் திணைப் பாடல் குறுந்தொகையில் 332-ஆவது பாடலாக உள்ளது. தலைவனுக்குத் தன் துயரை எடுத்துக் கூறவேண்டி தலைவி தோழியை வேண்டிக்கொள்வதாகப் பாடல் அமைந்துள்ளது.
பாடல் நடை
- குறுந்தொகை: 332
வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்
நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறுயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி யிழிதரு
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- தமிழ்ச்சுரங்கம்-குறுந்தொகை-332
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Oct-2023, 10:48:12 IST