கிள்ளிமங்கலங் கிழார்
To read the article in English: Killimangalan Kilar.
கிள்ளிமங்கலங் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய நான்கு பாடல்கள் குறுந்தொகையில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
பாண்டி நாட்டைச் சேர்ந்த கிள்ளிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது மகன் சோகோவனாரும் சங்கப்புலவர்.
இலக்கிய வாழ்க்கை
குறுந்தொகையில் 76, 110, 152, 181 -ஆவது பாடல்களைப் பாடினார். குறிஞ்சித்திணையில் இரண்டு பாடல்களும், முல்லைத்திணையில் இரண்டு பாடல்களும், மருதத்திணையில் ஒரு பாடலும் பாடினார்.
பாடல் நடை
- குறுந்தொகை 76
காந்தள் வேலி ஓங்குமலை நன்னாட்டுச்
செல்வல் என்பவோ கல்வரை மார்பர்
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத்தை
இத்தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
- குறுந்தொகை 110
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யாராகியரோ தோழி நீர
நீலப் பைம்போது உளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை நாட்டி
நுண்முள் ஈங்கை செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரக் தண் என்று
இன்னா எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:17 IST