பொதும்பில் கிழான் மகனார் வெண்கண்ணியார்
- கிழார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிழார் (பெயர் பட்டியல்)
- பொதும்பில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பொதும்பில் (பெயர் பட்டியல்)
பொதும்பில் கிழான் மகனார் வெண்கண்ணியார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
புலவர் பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் மகன் வெண்கண்ணியார். மதுரை பொதும்பு எனும் ஊரில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சங்கத்தொகை நூலான நற்றிணையில் (375, 387) இரண்டு பாடல்கள் பாடினார். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனின் பாசறை வாழ்க்கையையும், மின்னலைப்போல ஒளிவிடும் அவரின் வாள்பட்டையின் சிறப்பும் பாடலில் கூறப்பட்டுள்ளது. குருகுப் பறவையின் கூட்டம் தாம் அமர்ந்திருந்த புன்னை மரத்து மலர்கள் உதிரும்படி ஒருசேர எழுந்து பறக்கும் சேர்ப்புநிலத்தைப் பற்றிய சித்திரம் வருகிறது.
பாடல் நடை
- நற்றிணை: 375
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப,
வருவைஆயினோ நன்றே- பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- வைரத்தமிழ்-நற்றிணை 375
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Dec-2022, 13:43:30 IST