under review

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 5: Difference between revisions

From Tamil Wiki
(Link Created)
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 22: Line 22:
* சேதுபதி விறலி விடு தூது
* சேதுபதி விறலி விடு தூது
* தெய்வச்சிலையார் விறலிவிடு தூது
* தெய்வச்சிலையார் விறலிவிடு தூது
* துகில் விடு தூது
* [[துகில் விடு தூது]]
* [[எலி விடு தூது]]
* [[எலி விடு தூது]]
* மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது
* மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது
Line 62: Line 62:


* சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.
* சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|11-Feb-2024, 11:38:31 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:08, 13 June 2024

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 5

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 5 (2023), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 5-ல், 44 தூது இலக்கிய நூல்கள் இடம் பெற்றன.

பிரசுரம், வெளியீடு

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 5, 44 தூது இலக்கிய நூல்களின் தொகுப்பாகும். ஏப்ரல், 2023-ல் இந்நூல் வெளியானது. மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இவற்றைத் தொகுத்தளித்தார்.

உள்ளடக்கம்

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 5-ல் சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், தூது இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், அதன் இலக்கணம், வகைமைகள், உறுப்புகள், தூது இலக்கிய நூல்களின் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், நூல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றன. இவற்றுடன் 44 தூது இலக்கிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் அகர வரிசையில் 20-ம் நூற்றாண்டு வரை வெளியான தூது இலக்கிய நூல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அச்சில் வராத, ஓலைச்சுவடியாக உள்ள தூது நூல்கள் பற்றிய பட்டியலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூது இலக்கியங்கள்

கீழ்க்காணும் 44 தூது இலக்கிய நூல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றன.

மதிப்பீடு

சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது இலக்கிய நூல்கள் சிலவற்றின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 5 அமைந்துள்ளது. தமிழின் தொன்மையான, தற்போது அச்சில் இல்லாத குறிப்பிடத்தகுந்த சில தூது நூல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு சில தூது நூல்களும் இத்தொகுப்பில் உள்ளன. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் எளிதில் பயன்படும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Feb-2024, 11:38:31 IST