under review

தூது இலக்கிய நூல்கள்

From Tamil Wiki

தூது தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்திப் பாடல்களில் ஒரு கூறாக இருந்த தூதுப் பொருண்மை, பதினான்காம் நூற்றாண்டில் தனித்த ஓர் இலக்கிய வகையாக உருவெடுத்தது. காதலைக் கூறும் சிற்றிலக்கியங்களான தூது, உலா, மடல் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. இவை மூன்றுமே கலிவெண்பாவால் பாடப்படுபவை.

தூது இலக்கிய நூல்கள் பட்டியல்

பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு தொடங்கி, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு வரை பல்வேறு வகையான தூது இலக்கிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில...

எண் காலம் நூல்கள் ஆசிரியர்
1 பொ.யு. 13-ம் நூற்றாண்டு புலந்திரன் தூது புகழேந்திப் புலவர்
2 பொ.யு. 13-14-ம் நூற்றாண்டு தத்துவ சந்தேசம் வேதாந்த தேசிகர்
3 பொ.யு. 14-ம் நூற்றாண்டு நெஞ்சுவிடு தூது உமாபதி சிவாச்சாரியர்
4 பொ.யு. 16-ம் நூற்றாண்டு ஞானப்பிரகாசர் நெஞ்சுவிடு தூது மாசிலாமணி தேசிகர்
தெய்வச்சிலையார் விறலிவிடு தூது குமாரசாமி அவதானி
நெஞ்சுவிடு தூது தத்துவராயர்
5 பொ.யு. 17-ம் நூற்றாண்டு சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடு தூது துறைமங்கலம் சிவப்பிரகாசர்
சிற்றம்பல சம்பந்தர் கிளிவிடு தூது அழகிய சிற்றம்பலக் கவிராயர்
திருநறையூர் நம்பி மேகவிடு தூது பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
நாராயணசாமிப்பிள்ளை கிள்ளைவிடு தூது அவிநாசி நாதர்
நெஞ்சுவிடு தூது சாந்தலிங்க சுவாமிகள்
குருநாதசுவாமி கிள்ளைவிடு தூது வரத பண்டிதர்
6 பொ.யு. 18-ம் நூற்றாண்டு அழகர் கிள்ளைவிடு தூது பலபட்டடைச் சொக்கநாதர்
இராமலிங்கேசர் பணவிடு தூது பெரிய சரவணப்பெருமாள் கவிராயர்
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடு தூது கச்சியப்ப முனிவர்
கச்சியப்பர் நெஞ்சுவிடு தூது கச்சியப்பர் மாணவர்
கண்டி அரசன் கிள்ளை விடு தூது சிற்றம்பலப் புலவர்
காத்தான்பிள்ளை மதங்கிவிடு தூது மதுரகவிராயர்
சண்பகநல்லூர் சிவன் வண்டுவிடு தூது பலபட்டடைச் சொக்கநாதர்
சிதம்பரேசர் விறலிவிடு தூது தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை
கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது சுப்பிரதீபக் கவிராயர்
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது பலபட்டடைச் சொக்கநாதர்
மதுரைச் சொக்கநாதர் பணவிடு தூது பெரிய சரவணப்பெருமாள் கவிராயர்
மான்விடு தூது குழந்தைக் கவிராயர்
முத்துவிசய ரகுநாதர் பணவிடு தூது பலபட்டடைச் சொக்கநாதர்
7 பொ.யு. 18-19-ம் நூற்றாண்டு செந்தில் காத்தான்பிள்ளை பாங்கிவிடு தூது திருவேங்கடத்தான் கவிராயர்
புகையிலைவிடு தூது சீனி சர்க்கரைப் புலவர்
8 பொ.யு. 19-ம் நூற்றாண்டு அழகர் கமலவிடு தூது வேங்கடகிருட்டிண பாரதி
அன்புவிடு தூது பி.எஸ். இராசமாணிக்கம் பிள்ளை
அன்புவிடு தூது வே. முத்துசாமி ஐயர்
அன்னம்விடு தூது ந. முத்துச்சாமிக் கவிராயர்
கழுதைவிடு தூது மிதிலைப்பட்டிக் கவிராயர்
காந்தியடிகள் நெஞ்சு விடுதூது வேங்கடசாமி ரெட்டியார்
காலிங்கராயன் பஞ்சவர்ணத் தூது இ. சின்னத்தம்பிப் புலவர்
குமாரதேவர் நெஞ்சு விடு தூது சிதம்பர சுவாமிகள்
அன்னவிடு தூது அல்லி மரக்காயர்
சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது மீனாட்சிசுந்தரம் பிள்ளை
சேதுபதி விறலிவிடு தூது சரவணப் பெருமாள் கவிராயர்
தமிழ்விடு தூது அமிர்தம் பிள்ளை
தானப்பாசாரியார் தசவிடு தூது மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருப்போரூர்க் கிள்ளை விடு தூது கந்தசாமி முதலியார்
நல்லூர் கந்தசுவாமி கிள்ளைவிடு தூது சந்திரசேகர பண்டிதர்
நெஞ்சுவிடு தூது தி.செ.முருகதாசப்பிள்ளை
புகையிலைவிடு தூது சுப்பிரமணிய வேலச் சின்னோவையன்
மூவரையன் விறலி விடு தூது மிதிலைப்பட்டிச் சிற்றம்பலக் கவிராயர்
மேக தூதம் நாகநாத பண்டிதர்
வண்டுவிடு தூது அல்லி மரக்காயர்
வண்டுவிடு தூது மீனாட்சிசுந்தரக் கவிராயர்
வனசவிடு தூது கன்றாப்பூர்க் கவிராயர்
வானவன்விடு தூது யாகப்பப் பிள்ளை
ஹம்ச சந்தேசம் துரைசாமி மூப்பனார்
9 பொ.யு. 19-20-ம் நூற்றாண்டு கிளிவிடு தூது சி. சுப்பிரமணிய பாரதியார்
குருவிவிடு தூது சி.எம். இராமச்சந்திரன் செட்டியார்
செருப்புவிடு தூது பின்னத்தூர் நாராயண சாமி ஐயர்
தத்தைவிடு தூது சரவணமுத்துப்பிள்ளை
திருவாவடுதுறை அம்பல வாண தேசிகர் மீது பொன் விடு தூது அமிர்த சுந்தரநாதம் பிள்ளை
பழையது விடு தூது பின்னத்தூர் நாராயண சாமி ஐயர்
மயில்விடு தூது கு. நடேசக் கவுண்டர்
மறலிவிடு தூது நாகை. சதாசிவம்பிள்ளை
மாரி வாயில் ச. சோமசுந்தர பாரதியார்
மேகதூதக் காரிகை அ. குமாரசாமிப் புலவர்

உசாத்துணை

  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம்: பகுதி-1, ம.சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.


✅Finalised Page