சுப்பிரதீபக் கவிராயர்
From Tamil Wiki
- கவிராயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கவிராயர் (பெயர் பட்டியல்)
சுப்பிரதீபக் கவிராயர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். வீரமாமுனிவரின் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பிரதீபக் கவிராயர் சைவர். வீரமாமுனிவரின் தூண்டுதலின் பேரில் கத்தோலிக்கரானார்.
இலக்கிய வாழ்க்கை
சுப்பிரதீபக் கவிராயர் வீரமாமுனிவர் தேம்பாவணி எனும் காவியம் இயற்றக் காரணமாக அமைந்தவர். மதுரையில் இருந்த கூளப்ப நாயக்கன் பேரில் 'கூளப்ப நாயக்கன் காதல்' எனும் பாடல் எழுதினார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Oct-2023, 18:14:49 IST