10 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயம் சார்ந்த நூல்கள், உரை நூல்கள் சில உருவான நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு. பத்தாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பத்தாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்
நூல்கள் | ஆசிரியர் |
---|---|
அமிர்தபதி | அமிர்தபதியுரையார் |
தொல்காப்பியப் பொதுப்பாயிரம் உரை | ஆத்திரையன் பேராசிரியன் |
வடமொழி நூல்: ஸ்ரீ ஸ்தோத்ர ரத்நம், தனியன்கள் | ஆளவந்தார் |
சினேந்திர மாலை | உபேந்திராசாரியர் |
தில்லைத் திருவிசைப்பா | கண்டராதித்தர் |
இரட்டைமணிமாலைகள், அந்தாதி, | கபிலர் |
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் | கல்லாடதேவ நாயனார் |
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு | சேந்தனார் |
திருவிசைப்பா 4 பதிகம் | திருமாளிகைத் தேவர் |
திருவிசைப்பா 4 பதிகம் | திருவாலியமுதனார் |
குண்டலகேசி | குண்டலகேசி ஆசிரியர் |
சூளாமணி | தோலாமொழித் தேவர் |
பதினொராந் திருமுறைப் பிரபந்தங்கள் ஒன்பது | நக்கீரதேவ நாயனார் |
சிராமலையந்தாதி | நாராயணன், வேம்பை |
இறையனார் களவியலுரை (எழுதி வைத்தவர்) | நீலகண்டனார் |
நீலகேசி | நீலகேசி ஆசிரியர் |
பட்டினத்தார் பாடல்கள் | பட்டினத்தார் |
சிவபெருமான் திருஅந்தாதி | பரணதேவ நாயனார் |
பிங்கல நிகண்டு | பிங்கலர் |
கோல நற்குழல் பதிகம் | பிடவூர் வேளார் தந்தை |
திருக்குறள் உரை | மணக்குடவர் |
திருப்பதிக் கோவை | வங்கிபுரத்தாய்ச்சி |
திருவிசைப்பா | வேணாட்டடிகள் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பத்தாம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு : நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச் சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Dec-2022, 11:58:34 IST