under review

பிரபந்தத் திரட்டு

From Tamil Wiki

பிரபந்தத் திரட்டு (பொ.யு 18-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களில் ஒன்று. தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல். 18-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

நூல் அமைப்பு

பிரபந்தத் திரட்டில் 532 பாடல்கள் உள்ளன. இதன் திருத்தப் பதிப்பு 1980-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதில் சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எழுத்து, சொல், தானம்(இடம்), பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், முதலான பொருத்தங்களும் அதில் கூறப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

  • திரட்டியல்
  • புறநடையியல்
  • கருப்பொருளியல்
  • பொருத்தவியல்
  • உவமாரூட வியப்பு சார்வியல்
  • விசேடவணி வியப்பு சார்வோரியல்
  • சாதிமரபு சார்வோரியல்
  • குறுநில வியப்பு சார்வோரியல்
  • ஒழிபியல்
  • கொடையியல்

உசாத்துணை

  • வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12
  • தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007


✅Finalised Page