under review

தமிழ் சூஃபி ஞானிகள்

From Tamil Wiki

மெய்ஞான நெறிகளை இஸ்லாமியத் தத்துவக் கருத்துக்களோடு இறையுணர்வுடன் வெளிப்படுத்தி தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழ் சூஃபி ஞானிகள். இஸ்லாமிய மறைஞானத்தைப் பேசுபொருளாகக் கொண்டு, ஏக தெய்வ வாதத்தை முன்வைத்தவர்கள்.

வரலாறு

அரபு நாட்டிலிருந்து பொ.யு. 7-ம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்திற்கு, கேரளாவிற்கும் கடற்கரையோர பட்டினங்கள் வழியாக இஸ்லாமியர்கள் வந்தனர். பெர்சியாவில் ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய சூஃபித்துவம் தமிழகத்திலும் பரவியது. இங்குள்ள மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கி வளர்ந்தது. சூஃபித்துவம் தமிழக்கத்தின் சித்தர் மரபுடன் இணை வைக்கத் தகுந்தது. உலகளாவிய நிலையில் பதினான்கு சூஃபி தரீக்காக்கள்(வழிமுறைகள்) நிலைபெற்றுள்ளன. அவற்றுள் காதிரியா, ஷாதுலியா, சிஸ்தியா ஆகிய மூன்று தரீக்காக்களே தமிழகத்தில் பெரும்பான்மை பெற்று உள்ளன.

தமிழ் சூஃபி ஞானிகள் பட்டியல்

ஈழத்தமிழ் சூஃபிக்கள்
  • அப்துல் காதர்
  • அப்துல் கனி
  • இஸ்மா லெவ்வைப் புலவர்
  • காலிகாதிர் சம்சுதீன்
  • அக்கரைப்பற்று முகம்மது ஆஷிம் ஆலின்
  • ஒலுவில் யூசுஃப் பாவலர்
  • வேருவலை ஷெய்கு முஸ்தபா அலி
  • ஹபீப முகம்மது ஷேக்
  • கொழும்பு அ.லெ.ம. ஹாஜி முகம்மது காசி
  • மட்டக்களப்பு ஒலிவில் தா.ம.செய்யிது இப்றாஹீம் மெளலானா
  • செய்னா செ.மு.செய்யிது முகம்மது மெளலானா
  • சிதிதலெவ்வை முகம்மது காசீம் மரைக்காயர்
பெண் சூஃபிக்கள்
  • செய்யிது ஆசியா உம்மா
  • ரசூல் பீவி
  • இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள்
  • ஆற்றங்கரை நாச்சியார்
  • பரங்கிப்பேட்டை அல்குரை நாச்சியார்
  • குடந்தை அரைக்காசம்மா
  • புதுக்கோட்டை ஜச்சாபீவி
  • உபாதாவின் மனைவி உம்முஹரம்
  • ஆயிசா
  • அல் மன்னூபிய்யா
  • முஆதுல் அதவிய்யா
  • ஸ்வ்வானா பிஹ்தா
  • ஸித்தி ஸகீனா
  • ஜைனப் பினத் முஹம்மத்
  • ஆயிசா உம்மா
  • கதீஜா உம்மா
  • ஆமினா உம்மா
  • திருவனந்தபுரம் பீ அம்மா

உசாத்துணை


✅Finalised Page