under review

செய்கு அப்துல் ஹஸன்

From Tamil Wiki

செய்கு அப்துல் ஹஸன் (மெளனமணி மஸ்தான்) (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) இஸ்லாமியப் புலவர். சூஃபி ஞானப்பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

செய்கு அப்துல் ஹஸன் கனியாபுரம் வாவலப்பைக்கு மகனாகப் பிறந்தார். மெளனமணி மஸ்தான் என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

செய்கு அப்துல் ஹஸன் எழுதிய 'ஞான ரத்தினமாலை' சென்னை மனோன்மணி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. மூவாயிரத்து நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்ட இந்நூலை காயல கண்ணகுமது மகதூமுகம்மது பார்வையிட்டுப் பதிப்பித்தார். த. அருளப்ப முதலியார், அப்துல் காதிறு, அனந்தகவிப்ப்புலவர் ஆகியோர் சாற்றுக்கவி வழங்கினர். செய்கு அப்துல் ஹஸன் பெண்ணாசையைக் கடிந்து பாடல்கள் பாடினார்.

பாடல் நடை

உயிருக்கு உயிராய் ஒங்காரத் தொளி வாய்த்
தயிருக்குள் வெண்ணெயெனத் தாங்கி உயிர்கட்கு
உலகம் எங்கும் கிருபை கண்டின்புற
வழங்கும் பரனே

நூல் பட்டியல்

  • ஞான ரத்தினமாலை

உசாத்துணை


✅Finalised Page