under review

செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா

From Tamil Wiki

செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா (பொ.யு. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ் இஸ்லாமியப் புலவர். சூஃபி ஞானி.

வாழ்க்கைக்குறிப்பு

செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா கோட்டாறில் பிறந்தார். அரபு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமையுடையவர். இவரின் சீடர்கள் மேலப்பாளையம், ஆழ்வார்த்திருநகரி, ஏர்வாடி போன்ற ஊர்களில் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா 'வேதாந்த ரத்தினமாலை', 'வேதாந்த கண்ணிகள்', 'தத்துவ ஞான ஆனந்தக் களிப்பு', 'மெய்ஞானக் கும்மி', 'தோத்திரப்பதிகம்' ஆகிய நூல்களை எழுதினார். இவையனைத்தும் ஒரே தொகுதியாக 1903-ல் அச்சில் வெளியாகின.

பாடல் நடை

  • வேதாந்த ரத்தினமாலை

பன்னிரு காலால் நடந்திடும் பரியைப்
பாங்குடன் பிடித்தியான் பழக்கிப்
பன்னிரு மிசமு லகுலமாம் பொருளைப்
பரிந்தெடுத் தாயநத்திற பொருத்தி
யென்னிரு கலையு மிசைந்திடற் குதவி
யீந்தென துளமகிழந் திருக்க
உன்னரு ளோங்கும் வகையினி தளித்தே
யுதவிசெய் தாநெநதற் பரனே

நூல்கள் பட்டியல்

  • வேதாந்த ரத்தினமாலை
  • வேதாந்த கண்ணிகள்
  • தத்துவ ஞான ஆனந்தக் களிப்பு
  • மெய்ஞானக் கும்மி
  • தோத்திரப்பதிகம்

உசாத்துணை


✅Finalised Page