under review

கும்பகோணம் தங்கவேல் பிள்ளை

From Tamil Wiki

To read the article in English: Kumbakonam Thangavel Pillai. ‎

கும்பகோணம் தங்கவேல் பிள்ளை (1906 - 1981) ஒரு தவில்கலைஞர்.

இளமை, கல்வி

கும்பகோணத்தில் அய்யாக்கண்ணு தவில்காரர் - கண்ணம்மாள் இணையருக்கு 1906--ம் ஆண்டு தங்கவேல் பிள்ளை பிறந்தார்.

தங்கவேல் பிள்ளை முதலில் தந்தையிடம் தவில் கற்றார். பின்னர் கும்பகோணம் தாதக்கிருஷ்ணன் தவில்காரரின் மாணவராக ஏழாண்டுகள் மேற்பயிற்சி எடுத்துக் கொண்டார்.

தனிவாழ்க்கை

தங்கவேல் பிள்ளைக்கு மீனாக்ஷிசுந்தரம் (தவில்), கோவிந்தராஜன் (நாதஸ்வரம்) என்று இரு தம்பிகள்.

தங்கவேல் பிள்ளை பட்டம்மாள், நாகரத்னம்மாள் என்ற சகோதரிகளை மணந்து கொண்டார். இளைய மனைவிக்கு குழந்தைகள் இல்லை. மூத்தவர் பட்டம்மாள் பெற்ற குழந்தைகள்:

  • ஸ்வாமிநாதன் (தவில்)
  • ஜயலக்ஷ்மி (கணவர்: குடந்தை நாகராஜன்)
  • ஷண்முகம் (தவில்)
  • சங்கராபாய்
  • விஜயலக்ஷ்மி
  • மீனாக்ஷி (பரத நாட்டிய ஆசிரியை)
  • பழனிவேல் (கடம்)

இசைப்பணி

உருப்படிக்கு வாசிப்பது தங்கவேல் பிள்ளையின் தனிச்சிறப்பு. தங்கவேல் பிள்ளை கம்பினால் தொப்பியைத் தட்டி கையினால் 'கும்கீ’ எழுப்பும் முறையை அறிமுகம் செய்தவர். மிருதங்கம் போன்ற சொற்களை தவிலில் எழுப்பும் திறமை கொண்டவர். பலமுறை யாழ்ப்பாணம் சென்று வாசித்து பல பட்டங்கள் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு ஸங்கீத நாடக சங்கம் 1968-ம் ஆண்டு 'கலாசிகாமணி’ விருது வழங்கியது.

உடன் வாசித்த கலைஞர்கள்

கும்பகோணம் தங்கவேல் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்கு தவில் வாசித்திருக்கிறார்:

மாணவர்கள்

கும்பகோணம் தங்கவேல் பிள்ளையிடம் கற்ற முக்கியமான மாணவர்கள்:

  • திருநகரி நடேச பிள்ளை
  • தங்கவேல் பிள்ளையின் மகன்கள்

மறைவு

கும்பகோணம் தங்கவேல் பிள்ளை மதுப்பழக்கத்தால் உடல்நலம் குன்றியிருந்தார். 1981ல் அன்று தங்கவேல் பிள்ளை காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page