வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை
வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை (1894 - 1968) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
மாயூரம் வண்டிக்காரத்தெருவில் வாழ்ந்த தவிற்கலைஞர் முத்துவேல் பிள்ளை - திருநள்ளாறு அம்மணி அம்மாள் இணையருக்கு 1894-ம் ஆண்டில் மூத்த மகனாக ஷண்முகசுந்தரம் பிள்ளை பிறந்தார்.
ஷண்முகசுந்தரம் பிள்ளை, வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார்.
தனிவாழ்க்கை
ஷண்முகசுந்தரம் பிள்ளையின் உடன் பிறந்த தம்பி வேணுகோபால் பிள்ளையும் ஒரு நாதஸ்வரக் கலைஞர். நான்கு தங்கைகள்:
- குஞ்சம்மாள்(கணவர்: ஸ்ரீமுஷ்ணம் பாலுப்பிள்ளை - நாதஸ்வரம்)
- லோகாம்பாள் (கணவர்: சிறுபுலியூர் கோவிந்தஸ்வாமி பிள்ளை - தவில்)
- பட்டம்மாள் (கணவர்: சின்னையா பிள்ளை - மிருதங்கம்)
- சாரதாம்பாள் (கணவர்: பதரூர் ரத்தினம் பிள்ளை - நாதஸ்வரம்)
ஷண்முகசுந்தரம் பிள்ளை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இசைப்பணி
ஷண்முகசுந்தரம் பிள்ளையின் நாதஸ்வர இசை பெருத்த ஒலியுடனும் சிறந்த விரலடிகளுடனும் அமைந்திருந்தது. பல ஜமீன்களில் வாசித்து சாதராக்களும் பல பரிசுகளும் பெற்றவர். இலங்கையிலிருந்தும் கேரளத்தில் இருந்தும் பலர் ஷண்முகசுந்தரம் பிள்ளையிடம் வந்து இசை கற்றிருக்கின்றனர்.
சில சமயங்களில் கீரனூர் சின்னத்தம்பி பிள்ளையுடன் சேர்ந்து கச்சேரிகளில் வாசித்திருக்கிறார்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை
- திருக்கடையூர் சின்னையா பிள்ளை
- திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
- ஸ்ரீவாஞ்சியம் பக்கிரியா பிள்ளை
- நீடாமங்கலம் ஷண்முகவடிவேல்
மறைவு
வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை 1968-ம் ஆண்டில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 09:03:03 IST