under review

திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை

From Tamil Wiki
திருச்சேறை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருச்சேறை (பெயர் பட்டியல்)
XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை (மார்ச் 20, 1921 - டிசம்பர் 29, 1985) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறையில் ராஜகோபால பிள்ளை - அஞ்சுகத்தம்மாள் இணையருக்கு மார்ச் 20, 1921 அன்று கிருஷ்ணமூர்த்தி பிள்ளை பிறந்தார்.

முதலில் தந்தையிடம் நாதஸ்வரமும் திருமலாச்சாரியார் என்பவரிடம் வாய்ப்பாட்டும் கற்றார். பின்னர் ராஜாமணி சாஸ்திரிகள் மற்றும் வயலின் கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் கீர்த்தனைகள் கற்றிருக்கிறார்.

தனிவாழ்க்கை

ராமஸ்வாமி, ஸீதாராமன், சேதுராமன், பார்வதி, செண்பகவல்லி, பட்டம்மாள், பாப்பா ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையுடன் பிறந்தவர்கள்.

கீரனூர் சகோதரர்கள் எனப்பட்டவர்களில் ஒருவரான சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளையின் மகள் பட்டம்மாளை மணந்தார். இவர்களுக்கு நமசிவாயம் என்ற ஒரு மகன் பிறந்தார்.

இசைப்பணி

கிருஷ்ணமூர்த்தி பிள்ளை முதலில் தன் மூத்த சகோதரர் ராமாஸ்வாமி பிள்ளையுடன் சேர்ந்து நாதஸ்வரக் கச்சேரிகள் செய்தார். ஜனவரி 13, 1951 முதல் நாச்சியார்கோவில் சின்னத்தம்பி பிள்ளையுடன் சேர்ந்து வாசித்தார்.

சம்பிரதாய சுத்தமான மத்யம கால வாசிப்பு கிருஷ்ணமூர்த்தி பிள்ளையின் தனிச்சிறப்பு.

காஞ்சீபுரம் சங்கர மடத்தின் ஆஸ்தானக் கலைஞராக இருந்தார். பல பட்டங்களும் மைசூர் சமஸ்தானத்தில் தங்கப்பதக்கங்களும் சாதராவும் பெற்றிருக்கிறார்.

மாணவர்கள்

திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • யாழ்ப்பாணம் அளவெட்டி பத்மநாபன்
  • சிதம்பரநாதன்
  • பாலகிருஷ்ணன்
  • நாகேந்திரம்
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை டிசம்பர் 29, 1985 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2023, 21:12:03 IST