காவேரி இதழ் தொகுப்பு
- காவேரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காவேரி (பெயர் பட்டியல்)
காவேரி (1940 -1950), கும்பகோணத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். என்.ஆர். ராமானுஜன் காவேரி இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர். இவ்விதழின் தேர்தெடுக்கப்பட்ட படைப்புகளை கலைஞன் பதிப்பகம், ’காவேரி இதழ் தொகுப்பு' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளது.
பதிப்பு, வெளியீடு
1940 தொடங்கி சுமார் இருபதாண்டு காலம் வெளிவந்த இதழ் காவேரி. கும்பகோணத்தில் இருந்து வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர், என்.ஆர். ராமானுஜன். காவேரி இதழில் வெளியான கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலபடைப்புகளை கலைஞன் பதிப்பகம், ’காவேரி இதழ் தொகுப்பு' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியிட்டது. ப. முத்துக்குமாரசாமியுடன் இணைந்து வல்லிக்கண்ணன் இதனைத் தொகுத்திருந்தார். 2003-ல் இது வெளியானது.
உள்ளடக்கம்
முதல் பாகம்
கவிதைகள் | |
---|---|
புத்தாண்டு வணக்கம் | சுத்தானந்த பாரதி |
உலகம் அழிந்ததே! | இளம்பாரதி |
புத்த தெய்வம் | தமிழழகன் |
அழகுத் தத்துவம் | ரவி |
பரிதியருள் பாடிடுவோம்! | நா.சீ.வரதராசன் |
கட்டுரைகள் | |
மந்திரி சபை நினைவுகள் | தி. சே. சௌ. ராஜன் |
பாரதி - தமிழ் | வீ.ஜி. ஸ்ரீநிவாசன் |
ஆடிப்பாவை ஒரு தமிழ்நாட்டுச் சுயசரிதை | எம். அனந்த நாராயணன் ஐ.இ.கு |
வறுமையை வென்ற புலமை | நாகநாதபுரம் சண்முகாநந்தன் |
புகழேந்தித் தம்பிரான் | அனுஜன் |
நாகஸ்வரம் ராஜரத்தினம் பிள்ளை | ரங்கராமானுஜ அய்யங்கார் |
பட்டணம் சுப்பிரமணிய அய்யர் | கீதப்பிரியா |
முசிறி சுப்பிரமணிய அய்யர் | கீதப்பிரியா |
ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் | ஜனகம் |
டி.கே. பட்டம்மாள் | கீதப்பிரியா |
நாதயோகி காஞ்சிபுரம் நாயனாப்பிள்ளை(1887 - 1934) | ரங்கராமானுஜ அய்யங்கார் |
'காயன கந்தருவர்' செம்பை வைத்தியநாத பாகவதர் | கீதப்பிரியா |
கண்ணமங்கையில் ஒரு வண்ண வடிவம் | தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் |
ஸ்ரீமான் பாபனாசம் சிவன் | ரங்கராமானுஜ அய்யங்கார் |
பாரதத்தின் ஒளிமிகுந்த மாதர்கள் | ஸ்ரீமதி எஸ். அம்புஜம்மாள் |
பண்டை மகளிரின் பண்பு | வே. வேங்கடராஜுலு ரெட்டியார் |
பூர்வதேசம் | தி.நா. சுப்பிரமணியன் |
சங்கீத எவரெஸ்ட் படேகுலாம் அலிகான் | ரங்கராமானுஜ அய்யங்கார் |
கல்வியில் பெரிய கம்பன் | எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் |
மேனாட்டுக் கலைக்கூடங்கள் | டாக்டர் வே. ராகவன் |
தமிழில் புதுமுறை இலக்கியம் | கே.எஸ். ராமஸ்வாமி சாஸ்திரி |
மஹாமகம் | எம்.வெங்கட்ராமசாஸ்திரி |
ஆராவமுது | ஸ்ரீ.வ.ஆ. |
சந்திரனின் தங்கை | நா.கி.நாகராசன் |
கோடைக்கானல் | லக்ஷ்மி ஸ்ரீநிவாசன் |
டில்லித் தபால் | கே.ஸ்ரீநிவாசன் |
ஆலமரங்களின் நிழலிலே | உஷா |
ஸாயிபாபா, மஹரிஷி ரமணர், ஸ்ரீ அரவிந்தர் மும்மூர்த்திகளின் மார்க்கம் | பேராசிரியர் கே.ஆர்.ஆர். சாஸ்திரி |
சுசீந்திரம் பெரிய கோயில் | லக்ஷ்மி ஸ்ரீநிவாசன் |
நினைவுப் பாதையில் நிலைத்த நிகழ்ச்சிகள் | பத்மினி |
ஆண்மையும் பெண்மையும் | வே.நாராயணன் |
பவபூதி | க.சந்தானம் |
திருக்கயிலாய பரம்பரை | திருவாவடுதுறை ஆதீனம் |
காவேரியின் வேதாந்தம் | வி.வி.ஸ்ரீநிவாச ஐயங்கார் |
மரம் தரும் சர்க்கரை | நா.கி நாகராசன் |
தீபாவளி | டாக்டர் வே.ராகவன் |
சிறுகதைகள் | |
ஐயோ! அம்பிகா! | இதயம் |
கண்ணீரும் கதை சொல்லும்... | கே.பி.நடராஜன் |
புத்தி தானம்! | பரதேசி |
கங்கைக் கரையில் | கல்பனா |
கதைக்காக அல்ல | பில்லூர் சுந்தரராமன் |
துன்பம் நெருங்கி வந்த போது | நா. பார்த்தசாரதி |
சலனம்...! | அசேன்ராஜ் |
அம்பை | பீஷ்மன் |
ஏழையின் உள்ளம் | குஸுமா |
ரத்ன மாலா | எம். எஸ். கமலா |
சலனம் | விஜயஸ்ரீ |
விடிந்தது | ஜி. சதாசிவம் |
பண்டிகைப் பணம் | புனர்ஜன்மி |
காலம் வளர்க்கும் காதல் | ஜி. எஸ். மணி |
பாசமும் பிணிப்பும் | வேங்கடலட்சுமி |
கசக்கிய மொட்டு மலருமா? | க. கணபதி |
சில்பி | ரா. வீழிநாதன் |
பழிக்குப் பழி | அபர்ணா |
மூன்றாம் முறை | பட்டாபி. நாராயணன் |
மனக்குரங்கு | க. சந்தானம் |
மீளாத நகை | கோமதி நாகராஜன் |
சங்கமம்... | லல்லு |
மோகினிப்பெண் | திருவரங்கம் அமிழ்தன் |
இரண்டாம் பாகம்
சிறுகதைகள் | |
---|---|
தாலிக் கயிறு | இனியன் |
அவள் தியாகி | த.சேதுராமன் |
பாட்டு வாழியார் | அருள் செல்வநாயகம் |
உம்-ஊஹும்! | ராமகுமார் |
யாருக்கு யார்? | வெ. பத்மநாபன் |
பிரதிக்ஞை | மானசீகன் |
மனை வழக்கு | பூவாளூர் சுந்தரராமன் |
இறைவா ஏன்? | சாரி |
கசப்பு | வ. சம்பந்தன் |
ஏமாற்ற முடியுமா? | வ. சா. நாகராஜன் |
யோகம் | கே.வி.கே |
சுடுவினை | ஸ்ரீப்ரியா |
மன அமைதி | வேதஸ்ரீ |
மனஅழுக்கு | மாயாவி |
நிழலுருவம் | சா. வே. நா |
செத்தபின் சிறைவாசம் | ஏயஸ் |
கனவு | வை. சுப்ரமண்யம் |
உள்ளும் புறமும் | வாணீ |
வீரகாவியத்தில் | ந.விவேகானந்தன் |
தழும்பு | லால்குடி கிருஷ்ணமூர்த்தி |
வாழ்வித்தவள் | விஸ்வம் |
மாறா வடு | சச்சித |
வெற்றி யாருக்கு? | நாகு |
லட்சியமும் பக்தியும் | கிருஷ்ணா |
காதலா, கற்பனையா? | பி.ஆர். ராஜாராம் |
உடலும் உள்ளமும் | பா. வேங்கடசாமி |
கண்ணிழந்த கபோதி | ஏ. சுப்பையா |
மோகன ராகம் | க. பஞ்சாபகேசன் |
இருளும் ஒளியும் | கு. ப. சேது அம்மாள் |
அண்ணாமலைத் தீபம் | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் |
நர்ஸ் மீனா | வனமாலிகை |
அசலும் நகலும் | சக்ரதாரி |
ஜமீன் குடும்பம் | ஆர்வி |
கிரகப்பிரவேசம் | ரா.ஸ்ரீ. தேசிகன் |
தேடி வந்த புகழ் | கோமதி சுப்ரமணியம் |
வேளையும் சமயமும் | கி. ரா. கோபாலன் |
மொழி பெயர்ப்புக் கதைகள் | |
சீர்த்திருத்தம் | ப்ரேம் சந்த் |
வானுலகில் ஹிட்லர் | ஜய்லன் |
மொகஞ்சோதாரோவின் வீழ்ச்சி | வங்க மூலம்: ஸ்ரீ பிரமாதநாத் பிஸி, தமிழில்: ரா. வே. ஸ்ரீநிவாசன் |
சாரதா | மலையாள மூலம்: ஜெயதேவ், தமிழில்: எஸ்.பி. ராமகிருஷ்ணன் |
ராஜாசாகேப் | கன்னட மூலம்: த.ரா.சு., தமிழில்: ஹேமா ஆனந்ததீர்த்தன் |
புஷ்பா | மூலம் : கிஷோர்சாஹு, தமிழில் : டி. ராஜன் |
மந்திரம் | மூலம்: பிரேம்சந்த் , தமிழில் : டி. ராஜன் |
பல்டன் பீஜார் | உருது மூலம்: பேராசிரியர் அம்நத் பே தில், தமிழில்: ஷக்கர் நகர் சேகர் |
விதிவழியே... | தெலுங்கு மூலம்: மதுராந்தகம் இராஜாராம், தமிழில்: இளம்பாரதி |
நாடகம் | |
அஜந்தா | அ. ராம்கோபால் |
தியாகம் | சு.சுப்புலட்சுமி |
உசாத்துணை
- காவேரி இதழ் தொகுப்பு, வல்லிக்கண்ணன், ப. முத்துக்குமாரசாமி, கலைஞன் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Feb-2023, 06:11:53 IST