under review

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் ஆட்சி மொழிச் செயல்பாடுகளுக்காகவும், 1971-ல், தமிழ் வளர்ச்சித் துறை தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் துறை சார்ந்த தனது பணிகளை தமிழ் வளர்ச்சித் துறை முன்னெடுத்து வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகள்

தமிழ் வளர்ச்சித் துறையின் தலையாய பணி ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது. அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டத்தைச் செயல்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தமிழ்வளர்ச்சி இயக்ககம் மூலம் மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இலக்கிய வளர்ச்சி

தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில், பல்வேறு திட்டங்கள், தமிழ் வளர்ச்சித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கீழ்காணும் நிறுவனங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. திருவள்ளுவர் திருநாள் மற்றும் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டில் சில விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதாளர்கள், விருதுத் தொகையுடன் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

தமிழக அரசின் விருதுகள்

தமிழ்ப்பணிகள்

சிறந்த நூல்களுக்குப் பரிசு, நூல்கள் வெளியிட நிதியுதவி, திருக்குறள் முற்றோதல் பரிசு, மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிப் பரிசுகள், இளம் எழுத்தாளர்களுக்குக் கவிதை, கட்டுரைப் பயிற்சியும் பேச்சாளர்களுக்குப் பேச்சுப் பயிற்சியும் அளிக்கும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, தமிழறிஞர்களுக்கு நிதியுதவி எனப் பல்வேறு பணிகளை, தமிழ் வளர்ச்சித்துறை செயல்படுத்தி வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page