under review

இலக்கியச் சிந்தனை விருது பெற்ற நூல்கள்

From Tamil Wiki
Revision as of 17:05, 26 December 2022 by ASN (talk | contribs) (Proof Checked: Final Check)
இலக்கியச் சிந்தனை விருது பெற்ற நூல்களில் சில (படம் நன்றி: மு. இராமநாதன்)

பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பு தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து இவ்வமைப்பைத் தொடங்கினர். அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைகளையும், நூல்களையும் தேர்ந்தெடுத்து இலக்கியச் சிந்தனை அமைப்பு விருதினை வழங்குகிறது

இலக்கியச் சிந்தனை விருது பெற்ற நூல்கள்

1976 முதல், சிறந்த நூல் ஒன்றுக்குப் பரிசளித்து வருகிறது இலக்கியச் சிந்தனை. ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்களிலிருந்து சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து இலக்கியச் சிந்தனை அதற்குப் பரிசளிக்கிறது.

இலக்கியச் சிந்தனை விருது பெற்ற நூல்களில் சில:

எண் நூல்கள் ஆசிரியர்
1 போக்கிடம் விட்டல் ராவ்
2 18வது அட்சக் கோடு அசோகமித்திரன்
3 கடல்புரத்தில் வண்ணநிலவன்
4 நினைக்கப்படும் ஜெயந்தன்
5 பிஞ்சுகள் கி. ராஜநாராயணன்
6 பிறகு பூமணி
7 கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ணன்
8 மெர்க்குரிப் பூக்கள் பாலகுமாரன்
9 தண்ணீர் தண்ணீர் அசோகமித்திரன்
10 பாரதி-காலமும் கருத்தும் தொ.மு.சி. ரகுநாதன்
11 நளபாகம் தி. ஜானகிராமன்
12 சங்கம் கு. சின்னப்பபாரதி
13 கம்பனில் கலந்த நதிகள் முனைவர் அ. அறிவொளி
14 பெரிய புராணம்-ஓர் ஆய்வு அ.ச.ஞானசம்பந்தன்
15 தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் சிட்டி - சிவபாதசுந்தரம்
16 மானுடம் வெல்லும் பிரபஞ்சன்
17 துறைமுகம் தோப்பில் முகமது மீரான்
18 சுதந்திர தாகம் சி.சு. செல்லப்பா
19 மறுபக்கம் பொன்னீலன்
20 மூன்றாம் உலகப் போர் வைரமுத்து
21 மூளைக்குள் சுற்றுலா வெ. இறையன்பு

உசாத்துணை

இலக்கியச் சிந்தனையின் பொன்விழா: மு. இராமநாதன் தளம்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.