கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை: Difference between revisions
No edit summary |
Subhasrees (talk | contribs) |
||
Line 3: | Line 3: | ||
கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை திமிரி நாதசுரத்தை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்<ref>[https://madrasreview.com/art/lifestory-of-t-n-rajarathinam-pillai/ நாதசுரக் கருவி உருவாக்கத்தில் ராஜரத்தினம் பிள்ளை நிகழ்த்திய மாற்றங்கள்]</ref>. | கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை திமிரி நாதசுரத்தை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்<ref>[https://madrasreview.com/art/lifestory-of-t-n-rajarathinam-pillai/ நாதசுரக் கருவி உருவாக்கத்தில் ராஜரத்தினம் பிள்ளை நிகழ்த்திய மாற்றங்கள்]</ref>. | ||
== இளமை, கல்வி == | == இளமை, கல்வி == | ||
சூணாம்பேடு ஜமீந்தாரின் ஆஸ்தான நாதஸ்வரக் கலைஞர் பல்லவி கோவிந்தப் பிள்ளையின் மகனாக ஜூன் 1897-ல் சின்னத்தம்பி பிள்ளை பிறந்தார். இவரது அன்னை தவில் கலைஞர் கீரனூர் குழந்தைவேல் பிள்ளையின் மகள் சுந்தரம்மாள். | சூணாம்பேடு ஜமீந்தாரின் ஆஸ்தான நாதஸ்வரக் கலைஞர் பல்லவி கோவிந்தப் பிள்ளையின் மகனாக ஜூன் 1897-ல் சின்னத்தம்பி பிள்ளை பிறந்தார். இவரது அன்னை தவில் கலைஞர் கீரனூர் குழந்தைவேல் பிள்ளையின் மகள் சுந்தரம்மாள். | ||
சின்னத்தம்பிக்கு கீரனூர் முத்துப்பிள்ளை என்பவர் வாய்ப்பாட்டிலும் நாதஸ்வரத்திலும் பயிற்சியளித்தார். பின்னர் காஞ்சீபுரத்தில் வசித்த நாதஸ்வரக் கலைஞர் ஸ்வாமிநாத பிள்ளையிடம்(சின்னத்தம்பியின் தாய்மாமா) மேற்பயிற்சி பெற்றார். சின்னத்தம்பி பிள்ளை பாடுவதை ஒருமுறை கேட்ட காஞ்சீபுரம் நாயனாப்பிள்ளை தினந்தோறும் தன் வீட்டுக்கு வரச்சொல்லி ஏராளமான கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார். | சின்னத்தம்பிக்கு கீரனூர் முத்துப்பிள்ளை என்பவர் வாய்ப்பாட்டிலும் நாதஸ்வரத்திலும் பயிற்சியளித்தார். பின்னர் காஞ்சீபுரத்தில் வசித்த நாதஸ்வரக் கலைஞர் ஸ்வாமிநாத பிள்ளையிடம்(சின்னத்தம்பியின் தாய்மாமா) மேற்பயிற்சி பெற்றார். சின்னத்தம்பி பிள்ளை பாடுவதை ஒருமுறை கேட்ட காஞ்சீபுரம் நாயனாப்பிள்ளை தினந்தோறும் தன் வீட்டுக்கு வரச்சொல்லி ஏராளமான கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
சின்னத்தம்பி பிள்ளையின் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். சின்னத்தம்பி பிள்ளைக்கு உடன் பிறந்தவர் மூத்த சகோதரர் முத்துக்குமார பிள்ளை (பெரிய தம்பி), மூத்த சகோதரி செல்லம்மாள், தங்கை வேதவல்லி (கணவர்: மன்னார்குடி சோமையா பிள்ளை). | சின்னத்தம்பி பிள்ளையின் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். சின்னத்தம்பி பிள்ளைக்கு உடன் பிறந்தவர் மூத்த சகோதரர் முத்துக்குமார பிள்ளை (பெரிய தம்பி), மூத்த சகோதரி செல்லம்மாள், தங்கை வேதவல்லி (கணவர்: மன்னார்குடி சோமையா பிள்ளை). | ||
Line 15: | Line 13: | ||
சின்னத்தம்பி தனது மூத்த சகோதரி செல்லம்மாளின் மகள் அம்பாபாய் என்பவரை மணந்தார். அவர் இளமையிலேயே இறந்துவிட பின்னர் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையின் மகள் சிவகாமு அம்மாளை மணந்தார். இவர்களுக்கு இரு மகள்கள், இரு மகன்கள்: ஜயலக்ஷ்மி, ராமசுந்தரம் என்ற இரு மகள்களையும் [[திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை]] மணந்து கொண்டார். மகன்கள் குரு ராமலிங்கமும் அருள் வைத்தியநாதனும் இசைக்கலைஞர்கள். | சின்னத்தம்பி தனது மூத்த சகோதரி செல்லம்மாளின் மகள் அம்பாபாய் என்பவரை மணந்தார். அவர் இளமையிலேயே இறந்துவிட பின்னர் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையின் மகள் சிவகாமு அம்மாளை மணந்தார். இவர்களுக்கு இரு மகள்கள், இரு மகன்கள்: ஜயலக்ஷ்மி, ராமசுந்தரம் என்ற இரு மகள்களையும் [[திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை]] மணந்து கொண்டார். மகன்கள் குரு ராமலிங்கமும் அருள் வைத்தியநாதனும் இசைக்கலைஞர்கள். | ||
== இசைப்பணி == | == இசைப்பணி == | ||
சின்னத்தம்பி பிள்ளை கீரனூருக்கு அருகில் உள்ள சிறுபுலியூரைச் சேர்ந்த கண்ணப்பா பிள்ளை என்பவருடன் இணைந்து கச்சேரிகள் செய்யத்தொடங்கினார். இவர்கள் ‘கீரனூர் சகோதரர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமாக சில இசைத்தட்டுக்கள் பதிவு செய்திருக்கின்றனர். | சின்னத்தம்பி பிள்ளை கீரனூருக்கு அருகில் உள்ள சிறுபுலியூரைச் சேர்ந்த கண்ணப்பா பிள்ளை என்பவருடன் இணைந்து கச்சேரிகள் செய்யத்தொடங்கினார். இவர்கள் ‘கீரனூர் சகோதரர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமாக சில இசைத்தட்டுக்கள் பதிவு செய்திருக்கின்றனர். | ||
Line 25: | Line 22: | ||
1937-ஆம் ஆண்டு சென்னை குமரகோட்டத்தில் சின்னத்தம்பி பிள்ளைக்கு ‘ஸ்பாரஞ்சித ஸங்கீத பூஷணம்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. | 1937-ஆம் ஆண்டு சென்னை குமரகோட்டத்தில் சின்னத்தம்பி பிள்ளைக்கு ‘ஸ்பாரஞ்சித ஸங்கீத பூஷணம்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. | ||
சின்னத்தம்பி பிள்ளை நாதஸ்வரம் தவிர வாய்ப்பாட்டிலும், தவில் வாசிப்பதிலும் வல்லவர். | சின்னத்தம்பி பிள்ளை நாதஸ்வரம் தவிர வாய்ப்பாட்டிலும், தவில் வாசிப்பதிலும் வல்லவர். சில கச்சேரிகளில் கஞ்சிராவும் வாசித்திருக்கிறார். இவருக்கு நிரந்தரத் தவில்காரராக இருந்த நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளைக்கு அவ்வப்போது மோஹராக்களையும் ஜதிகளையும், கோர்வைகளையும் சின்னத்தம்பி பிள்ளை உருவாக்கி சொல்லி இருக்கிறார். | ||
சில சமயம் கீரனூர் சகோதரர்கள் இடையே மனவேற்றுமை ஏற்பட்டு பிரிந்தும் கச்சேரிகள் செய்திருக்கிறார்கள். அது போன்ற காலத்தில் சின்னத்தம்பி பிள்ளை தவில் வாசிக்க, [[வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை]]யை அழைத்துச் செல்வது வழக்கம். கண்ணப்பா பிள்ளை திருக்கண்ணபுரம் குமாரஸ்வாமி பிள்ளையை அழைத்துச் செல்வார். எத்தனை மனவேற்றுமை ஏற்பட்டாலும் மீண்டும் விரைவிலேயே இருவரும் ஒன்று சேர்ந்து விடுவதும் வழக்கமாக இருந்தது. | சில சமயம் கீரனூர் சகோதரர்கள் இடையே மனவேற்றுமை ஏற்பட்டு பிரிந்தும் கச்சேரிகள் செய்திருக்கிறார்கள். அது போன்ற காலத்தில் சின்னத்தம்பி பிள்ளை தவில் வாசிக்க, [[வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை]]யை அழைத்துச் செல்வது வழக்கம். கண்ணப்பா பிள்ளை திருக்கண்ணபுரம் குமாரஸ்வாமி பிள்ளையை அழைத்துச் செல்வார். எத்தனை மனவேற்றுமை ஏற்பட்டாலும் மீண்டும் விரைவிலேயே இருவரும் ஒன்று சேர்ந்து விடுவதும் வழக்கமாக இருந்தது. | ||
====== மாணவர்கள் ====== | ====== மாணவர்கள் ====== | ||
கீரனூர் சின்னத்தம்பி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்: | கீரனூர் சின்னத்தம்பி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்: | ||
* [[வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை]] | * [[வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை]] | ||
* அம்பல் ராமச்சந்திர பிள்ளை | * அம்பல் ராமச்சந்திர பிள்ளை | ||
* திருமாகாளம் சோமாஸ்கந்த பிள்ளை | * திருமாகாளம் சோமாஸ்கந்த பிள்ளை | ||
* சீர்காழி திருநாவுக்கரசு பிள்ளை | * சீர்காழி திருநாவுக்கரசு பிள்ளை | ||
====== தவில் வாசித்த இசைக்கலைஞர்கள் ====== | ====== தவில் வாசித்த இசைக்கலைஞர்கள் ====== | ||
கீரனூர் சகோதரர்களுடன் தவில் வாசித்த கலைஞர்கள்: | கீரனூர் சகோதரர்களுடன் தவில் வாசித்த கலைஞர்கள்: | ||
* பெருஞ்சேரி கோவிந்தஸ்வாமி பிள்ளை | * பெருஞ்சேரி கோவிந்தஸ்வாமி பிள்ளை | ||
* காரைக்கால் பழனிவேல் பிள்ளை | * காரைக்கால் பழனிவேல் பிள்ளை | ||
* திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை | * [[திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை]] | ||
* [[காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை|அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை]] | * [[காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை|அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை]] | ||
* [[கும்பகோணம் தாதக்கிருஷ்ணன்]] | * [[கும்பகோணம் தாதக்கிருஷ்ணன்]] | ||
Line 48: | Line 41: | ||
* [[நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] | * [[நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] | ||
* [[மன்னார்குடி நடேச பிள்ளை]] | * [[மன்னார்குடி நடேச பிள்ளை]] | ||
* விராலிமலை முத்தையா பிள்ளை | * [[விராலிமலை முத்தையா பிள்ளை]] | ||
* [[திருக்கடையூர் சின்னையா பிள்ளை]] | * [[திருக்கடையூர் சின்னையா பிள்ளை]] | ||
* திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை | * [[திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை]] | ||
* [[மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை|மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை]] | * [[மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை|மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை]] | ||
* [[கும்பகோணம் தங்கவேல் பிள்ளை]] | * [[கும்பகோணம் தங்கவேல் பிள்ளை]] | ||
* | * [[நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை]] | ||
*[[திருநகரி நடேச பிள்ளை]] | *[[திருநகரி நடேச பிள்ளை]] | ||
*[[வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை]] | |||
== மறைவு == | == மறைவு == | ||
கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை மார்ச் 9, 1942 அன்று காலமானார். | கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை மார்ச் 9, 1942 அன்று காலமானார். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | * மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references/> | <references/> | ||
{{finalised}} | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]] | [[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]] |
Revision as of 15:19, 4 July 2022
கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை (சிவசுப்பிரமணியன்) (ஜூன் 1897 - மார்ச் 9, 1942) ஒரு நாதஸ்வரக் கலைஞர். “கீரனூர் சகோதரர்கள்” என்றறியப்பட்ட இருவரில் ஒருவர்.
கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை திமிரி நாதசுரத்தை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்[1].
இளமை, கல்வி
சூணாம்பேடு ஜமீந்தாரின் ஆஸ்தான நாதஸ்வரக் கலைஞர் பல்லவி கோவிந்தப் பிள்ளையின் மகனாக ஜூன் 1897-ல் சின்னத்தம்பி பிள்ளை பிறந்தார். இவரது அன்னை தவில் கலைஞர் கீரனூர் குழந்தைவேல் பிள்ளையின் மகள் சுந்தரம்மாள்.
சின்னத்தம்பிக்கு கீரனூர் முத்துப்பிள்ளை என்பவர் வாய்ப்பாட்டிலும் நாதஸ்வரத்திலும் பயிற்சியளித்தார். பின்னர் காஞ்சீபுரத்தில் வசித்த நாதஸ்வரக் கலைஞர் ஸ்வாமிநாத பிள்ளையிடம்(சின்னத்தம்பியின் தாய்மாமா) மேற்பயிற்சி பெற்றார். சின்னத்தம்பி பிள்ளை பாடுவதை ஒருமுறை கேட்ட காஞ்சீபுரம் நாயனாப்பிள்ளை தினந்தோறும் தன் வீட்டுக்கு வரச்சொல்லி ஏராளமான கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார்.
தனிவாழ்க்கை
சின்னத்தம்பி பிள்ளையின் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். சின்னத்தம்பி பிள்ளைக்கு உடன் பிறந்தவர் மூத்த சகோதரர் முத்துக்குமார பிள்ளை (பெரிய தம்பி), மூத்த சகோதரி செல்லம்மாள், தங்கை வேதவல்லி (கணவர்: மன்னார்குடி சோமையா பிள்ளை).
வடலூர் ராமலிங்க வள்ளலாரிடம் அளவற்ற பக்தி கொண்டவர். கீரனூரில் ராமலிங்கஸ்வாமி மடம் ஒன்றைக்கட்டி, ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரவழிபாடு நடத்தி வந்தார்.
சின்னத்தம்பி தனது மூத்த சகோதரி செல்லம்மாளின் மகள் அம்பாபாய் என்பவரை மணந்தார். அவர் இளமையிலேயே இறந்துவிட பின்னர் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையின் மகள் சிவகாமு அம்மாளை மணந்தார். இவர்களுக்கு இரு மகள்கள், இரு மகன்கள்: ஜயலக்ஷ்மி, ராமசுந்தரம் என்ற இரு மகள்களையும் திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை மணந்து கொண்டார். மகன்கள் குரு ராமலிங்கமும் அருள் வைத்தியநாதனும் இசைக்கலைஞர்கள்.
இசைப்பணி
சின்னத்தம்பி பிள்ளை கீரனூருக்கு அருகில் உள்ள சிறுபுலியூரைச் சேர்ந்த கண்ணப்பா பிள்ளை என்பவருடன் இணைந்து கச்சேரிகள் செய்யத்தொடங்கினார். இவர்கள் ‘கீரனூர் சகோதரர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமாக சில இசைத்தட்டுக்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
1932-ஆம் ஆண்டு கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை 18 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாதசுரத்தை அறிமுகம் செய்தார். இத்தகைய நாலரை, நான்கு, மூன்றரை, மூன்று ஆகிய கட்டையுள்ள நாதசுரங்களுக்கு ‘திமிரி நாதசுரம்’ என்று பெயர்.
சின்னத்தம்பி பிள்ளை பல்லவி வாசித்து ஸ்வரப்பிரஸ்தாரம் விரிவாக செய்வதில் திறமை பெற்றிருந்தார். ராமநாதபுரம் அரண்மனையில் பரிசுகள் பெற்றிருக்கிறார். 1927-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் நடத்திய இசை மாநாட்டில் கீரனூர் சகோதரர்கள் மேளமும் மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை மேளமும் நடைபெற்றன. அங்கு இவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. தருமபுரம் ஆதீனகர்த்தரும் தங்கப் பதக்கங்களும் தங்கக் கைச்சங்கிலிகளும் வழங்கியுள்ளார். வருடந்தோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனையில் தவறாமல் கலந்து கொள்வதை கீரனூர் சகோதரர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
1937-ஆம் ஆண்டு சென்னை குமரகோட்டத்தில் சின்னத்தம்பி பிள்ளைக்கு ‘ஸ்பாரஞ்சித ஸங்கீத பூஷணம்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
சின்னத்தம்பி பிள்ளை நாதஸ்வரம் தவிர வாய்ப்பாட்டிலும், தவில் வாசிப்பதிலும் வல்லவர். சில கச்சேரிகளில் கஞ்சிராவும் வாசித்திருக்கிறார். இவருக்கு நிரந்தரத் தவில்காரராக இருந்த நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளைக்கு அவ்வப்போது மோஹராக்களையும் ஜதிகளையும், கோர்வைகளையும் சின்னத்தம்பி பிள்ளை உருவாக்கி சொல்லி இருக்கிறார்.
சில சமயம் கீரனூர் சகோதரர்கள் இடையே மனவேற்றுமை ஏற்பட்டு பிரிந்தும் கச்சேரிகள் செய்திருக்கிறார்கள். அது போன்ற காலத்தில் சின்னத்தம்பி பிள்ளை தவில் வாசிக்க, வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளையை அழைத்துச் செல்வது வழக்கம். கண்ணப்பா பிள்ளை திருக்கண்ணபுரம் குமாரஸ்வாமி பிள்ளையை அழைத்துச் செல்வார். எத்தனை மனவேற்றுமை ஏற்பட்டாலும் மீண்டும் விரைவிலேயே இருவரும் ஒன்று சேர்ந்து விடுவதும் வழக்கமாக இருந்தது.
மாணவர்கள்
கீரனூர் சின்னத்தம்பி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை
- அம்பல் ராமச்சந்திர பிள்ளை
- திருமாகாளம் சோமாஸ்கந்த பிள்ளை
- சீர்காழி திருநாவுக்கரசு பிள்ளை
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
கீரனூர் சகோதரர்களுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- பெருஞ்சேரி கோவிந்தஸ்வாமி பிள்ளை
- காரைக்கால் பழனிவேல் பிள்ளை
- திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை
- அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை
- கும்பகோணம் தாதக்கிருஷ்ணன்
- காவாலக்குடி சோமுப் பிள்ளை
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- மன்னார்குடி நடேச பிள்ளை
- விராலிமலை முத்தையா பிள்ளை
- திருக்கடையூர் சின்னையா பிள்ளை
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
- திருநகரி நடேச பிள்ளை
- வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை
மறைவு
கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை மார்ச் 9, 1942 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
அடிக்குறிப்புகள்
✅Finalised Page