மன்னார்குடி நடேச பிள்ளை
- நடேச என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நடேச (பெயர் பட்டியல்)
மன்னார்குடி நடேச பிள்ளை (1897 - 1972) ஒரு தவில் கலைஞர்.
பிறப்பு, கல்வி
மன்னார்குடியில் கோவிந்தஸ்வாமி பிள்ளைக்கும் தங்கம்மாளுக்கும் ஒரே மகனாக 1897-ம் ஆண்டு நடேச பிள்ளை பிறந்தார்.
நடேச பிள்ளை தன் சிற்றப்பா மன்னார்குடி பக்கிரிப் பிள்ளையிடம் தவிற்கலையைக் கற்றார்.
தனிவாழ்க்கை
நடேச பிள்ளை பார்வதியம்மாள் என்பவரை 1925-ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ராஜகோபால் (தவில்) என்ற மகனும் தனகோடியம்மாள் என்ற மகளும் பிறந்தனர்.
இசைப்பணி
நடேச பிள்ளை கற்பனை வளம் மிக்க கலைஞர், ஒரு முறை வாசித்ததை மறுமுறை வாசிக்காத 'கற்பனையூற்று’ எனப் பெயர் பெற்றார். உருட்டுச் சொல் எனப்படும் வாசிப்பு முறையில் புகழ் பெற்றவர். நடேச பிள்ளை மோஹரா ஒன்றை உருட்டுச்சொற்களைக் கொண்டே வாசித்ததை பலரும் பாராட்டியிருக்கின்றனர்.
நடேச பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.
உடன் வாசித்த கலைஞர்கள்
மன்னார்குடி நடேச பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- நீடாமங்கலம் சிங்காரம் பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை
- மன்னார்குடி சாரநாத பிள்ளை
- கீரனூர் சகோதரர்கள்
- திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை
- திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை
- தஞ்சை கன்னையா ரெட்டியார்
- திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
மறைவு
மன்னார்குடி நடேச பிள்ளை 1972-ம் ஆண்டு மறைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 07:05:33 IST