under review

சீறூர் மன்னர்கள்

From Tamil Wiki

சீறூர் மன்னர்கள் சங்ககாலத்தில் வாழ்ந்த பதினாறு தொல்குடி மன்னர்கள். வேந்தர், வேளிர், குறுநில மன்னர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள். மறப்பண்பில் பெருநில வேந்தரை விட மேம்பட்டிருந்தனர்.

சீறூர் மன்னர்கள் பற்றி

தொல்காப்பியத்திலும், சங்கப்பாடல்கள் தொகுப்பில் புறநானூறு, அகநானூறு, நற்றிணை ஆகியவற்றிலும் சீறூர் மன்னர்கள் பற்றிய செய்திகள் பயின்று வந்துள்ளன. குலக் கலப்பை விரும்பாதவர்கள். பெருநில மன்னர்கள் பெண் கேட்டு வந்தாலும் கொடுக்க மறுத்து போர் புரியும் தன்மையினர். மறப்பண்பு உடையவர்கள். ஓரெயில் மன்னன், சிறுகுடி மன்னன், சீறூர் மதவலி, தொல்குடி மன்னன், முதுகுடி மன்னன், மூதில் முல்லையின் மன்னன் ஆகிய பெயர்களில் சங்கப்பாடல்களில் குறிக்கப்படுகின்றனர்.

பாடல்கள்

கீழ்க்கண்ட பாடல்களில் சீறூர் மன்னர்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

  • தொல்காப்பியம் - பொருளதிகாரம் 77
  • புறநானூறு - 197, 299, 308, 328, 338, 332, 353, 354
  • அகநானூறு - 373, 117, 204, 269, 270
  • நற்றிணை - 340, 367

சீறூர் மன்னர்கள் பட்டியல்

  1. அம்பர்கிழான் அருவந்தை
  2. அருமன்
  3. அள்ளன்
  4. ஈந்தூர்கிழான் தோயன்மாறன்
  5. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  6. கொடுமுடி
  7. சிறுகுடிகிழான் பண்ணன்
  8. தழும்பன்
  9. நாலைகிழவன் நாகன்
  10. போஒர் கிழவோன் பழையன்
  11. முசுண்டை
  12. வயவன்
  13. வல்லங்கிழவோன் நல்லடி
  14. பண்ணன் (வல்லார் கிழான்)
  15. வாணன்
  16. விரான்

உசாத்துணை


✅Finalised Page