under review

அருமன்

From Tamil Wiki

அருமன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். மூதூர் என்ற சீறூரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

அருமனின் பிற பெயர்கள் ஆதியருமன், மூதிலருமன். அருமன் மூதூரை ஆட்சி செய்தான். செல்வ செழிப்புடைய ஊர். அருமனின் ஊரைப் பற்றிய செய்திகள் நற்றிணையிலும் (367), குறுந்தொகையிலும் (293) உள்ளன. வள்ளல் மூதில் அருமன் நெல்லஞ் சோறும், கருணைக் கிழங்குக் குழம்பும் வந்தவர்களுக்கெல்லாம் வழங்குவான். ஆதி அருமனுக்குரிய பழைமையான ஊரில், கள் குடிக்கும் விருப்பத்தோடு செல்பவர்கள் கள்ளைக் குடித்துவிட்டுத் திரும்பும் பொழுது அங்கு உள்ள பாளை ஈன்ற நாரையுடைய சிறிய காய்களைக்கொண்ட உயர்ந்த கரிய பனையின் நுங்கையும் கொண்டு செல்வர். இவனைப் பாடிய புலவர்கள் ஆத்திரையனார், நக்கீரர்.

உசாத்துணை


✅Finalised Page