under review

கொடுமுடி

From Tamil Wiki

கொடுமுடி (மன்னன்) சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

கொடுமுடி என்ற மன்னனைப்பற்றிய செய்திகள் அகநானூற்றில் 159-ஆவது பாடலாக அமைந்துள்ளது. கொடுமுடி ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். ஆமூர் குறும்பொறை மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடைய ஊராக அமைந்திருந்தது. செல்வமிக்க நாடு. இவன் சேரமானுக்கு பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான். மறப்பண்பு உடையவன்.

உசாத்துணை


✅Finalised Page