under review

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

From Tamil Wiki

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஒல்லையூரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஒல்லையூரை ஆட்சி செய்தான். ஒல்லையூர் என்பது கோனாட்டில் இக்காலத்தில் ஒலியமங்கலம் என்று அழைக்கப்படும் ஊர் என உ.வே.சா குறிப்பிட்டார். இவனது தந்தை ‘ஒல்லையூர் கிழான்’ எனப் போற்றப்பட்டவன். இவனைப்பற்றிய பாடல் ஒன்று புறநானூற்றில் 242-ஆவது பாடலாக உள்ளது. குடவாயிற் கீரத்தனார் இவனைப்பாடினார்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனுடன் செய்த போரில் இவன் மாண்டான். வல்வேல் சாத்தன் என இவன் போற்றப்பட்டான். வலிமையாகத் தாக்கும்படி வேல் வீசவல்லவன் என்பது இதன் பொருள். இவனை இழந்த துக்கத்தில் அவன் நாட்டு இளைஞர்களும், இளம்பெண்களும், யாழால் வளைத்துப் பறித்துச் சூடும் பாணர்களும், பாடினிப் பெண்களும் மகிழ்ச்சியின் அடையாளமாகச் சூடும் முல்லைப் பூவைச் சூடவில்லை என பாடல் கூறுகிறது.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page