being created

கா.ர. கோவிந்தராச முதலியார்

From Tamil Wiki

கா.ர. கோவிந்தராச முதலியார் (கா.ர. கோ) (அக்டோபர் 31,1874 - ஜூலை 12, 1952) எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர்.

பிறப்பு,கல்வி

கா.ர. கோவிந்தராச முதலியார் காஞ்சிபுரத்தில் அர்ங்கசாமி முதலியார்-கமலம்மாள் இணையருக்கு அக்டோபர் 31,1874 அன்று பிறந்தார். இரு சகோதரிகள் திருவேங்கடம் அம்மாள், நாகரத்தினம். இளம் வயதில் தந்தையை இழந்த கோவிதராச முதலியார் செங்கல்வராயன் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். வாசிப்பினாலும், சொற்பொழிவுகளைக் கேட்டு வந்ததாலும் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். பசுபதிநாயக்கர், அப்பன் செட்டியார் ஆகியோரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். காஞ்சியில் வாழ்ந்த மாகவித்வான் இராமசாமி நாயுடுவிடம் திருக்குறள், கம்பராமாயணம், நம்பி அகப்பொருள், தஞ்சைவாணன் கோவை ஆகியவற்றைக் கற்றபோது கா. நமச்சிவாய முதலியாரும் அவருடன் கற்றார். கோ. வடிவேலு செட்டியாரிடம் நன்னூல், தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றைக் கற்றார்.

தானெ படித்து தொல்காபியத்தை கற்றார். தன் ஐயங்களை தனசுந்தரம் பிள்ளையிடம் தீர்த்துக்கொண்டார்.

தனி வாழ்க்கை

கா.ர.கோ ஜீவரத்னம் அம்மையாரை மணந்துகொண்டார். ஒரே மகள் கிருஷ்ணவேணி.

கல்விப்பணி

கா.ர,கோ. 1895-ல்  அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, தொடக்கத் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றார். சிறுவள்ளூர் துணை உயர்வுப் பள்ளியில் ஆசிரியராகவும், சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகவும், 1910 முதல் 1922 வரை பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் துணைத் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.


இலக்கிய வாழ்க்கை

உரைநடை நூல்கள் பலவற்றையும் இயற்றியுள்ளார். அவற்றுள் கோவலன் சரிதை, சங்கநூல், இந்திய வீரர், ஆழ்வார் வரலாறு, ஆழ்வார் வழிக் குரவர் வரலாறு உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கனவாகும். திருப்பாவை ஆராய்ச்சி, முல்லைப்பாட்டு உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார். அம்பிகாபதியும் அரசிளங்குமரியும் என்னும் நாடக நூலையும் இயற்றியுள்ளார்.

பதிப்பியல்

கா.ர. கோ பணி ஓய்வு பெற்றபின் தமிழாய்வுப் பணியில்கவனம் செலுத்தினார். யாப்பருங்கலக்காரிகை, நன்னூல் இராமானுசக் கவிராயர் விருத்தியுரை, இறையனார் அகப்பொருளுரை, வீரசோழியம் பழைய உரை, அகப்பொருள் பழைய உரை, நேமிநாதம், தொல்காப்பியம் முதல் சூத்திரவிருத்தி, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை முதலிய நூல்களைப் பதிப்பித்தார். கா.ர. கோவின் விரிவான அடிக்குறிப்புகள் நூல்களைக் கற்பவர்களுக்கு பொருள் மேலும் விள்ங்கச் செய்யும் வகையில் மைந்தவை

உரைகள்

கா.ர. கோ சரஸ்வதி அந்தாதி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, பன்னிரு பாட்டியல், அரங்கசாமிப் பாட்டியல் முதலிய நூல்களுக்கு உரையெழுதினார். களவழி நாற்பது,  திரிகடுகம், நான்மணிக் கடிகை, ஏலாதி, நளவெண்பா உள்ளிட்ட நூல்களுக்கு விரிவான குறிப்புகள் எழுதினார். செய்யுள் நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார்.

விருதுகள், பரிசுகள்

இலக்கிய இடம்

படைப்புகள்

உசாத்துணை

பெரும்புலவர் கா.ர. கோவிந்தராச முதலியார்- மு.இளங்கோவன்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.