under review

பள்ளு இலக்கிய நூல்கள் பட்டியல்: Difference between revisions

From Tamil Wiki
(Removed extra blank characters from template paragraphs)
(Corrected error in line feed character)
 
(5 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:Mukkudal Pallu.jpg|thumb|முக்கூடற் பள்ளு]]
[[File:Mukkudal Pallu.jpg|thumb|முக்கூடற் பள்ளு]]
[[File:Kanjami Chettiyar Pallu.jpg|thumb|கஞ்சமி செட்டியார் பள்ளு]]
[[File:Kanjami Chettiyar Pallu.jpg|thumb|கஞ்சமி செட்டியார் பள்ளு]]
தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பள்ளு. இது மருத நில மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியம். உழவுத் தொழில் செய்யும் பள்ளர்களின் வாழ்க்கையைப் பற்றி பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கிய நூல்கள் எளிமையும் இனிமையும் வாய்ந்தவை. இவற்றின் காலம் பொ. யு. பதினாறாம் நூற்றாண்டு.
தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பள்ளு. இது மருத நில மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியம். உழவுத் தொழில் செய்யும் பள்ளர்களின் வாழ்க்கையைப் பற்றி பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கிய நூல்கள் எளிமையும் இனிமையும் வாய்ந்தவை. இவற்றின் காலம் பொ. யு. பதினாறாம் நூற்றாண்டு.
== பள்ளு நூல்களின் இலக்கணம் ==
== பள்ளு நூல்களின் இலக்கணம் ==
[[பிரபந்த மரபியல்]], [[பிரபந்த தீபிகை|பிரபந்தத் தீபிகை]], வச்சணந்தி மாலை, [[பன்னிரு பாட்டியல்]], [[சிதம்பரப் பாட்டியல்|சிதம்பரப்பாட்டியல்]], இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற இலக்கண நூல்களில் [[பள்ளு]] பற்றியக் குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை. [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]]த்தில், பொருளதிகாரம், செய்யுளியல் இடம் பெற்றிருக்கும், ‘சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து' என்ற நூற்பாவில் ‘சேரிமொழி’ என்பது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.  
[[பிரபந்த மரபியல்]], [[பிரபந்த தீபிகை|பிரபந்தத் தீபிகை]], வச்சணந்தி மாலை, [[பன்னிரு பாட்டியல்]], [[சிதம்பரப் பாட்டியல்|சிதம்பரப்பாட்டியல்]], இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற இலக்கண நூல்களில் [[பள்ளு]] பற்றியக் குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை. [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]]த்தில் பொருளதிகாரம், செய்யுளியல் இடம் பெற்றிருக்கும் ‘சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து' என்ற நூற்பாவில் ‘சேரிமொழி’ என்பது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.  
பன்னிரு பாட்டியலில் உழத்திப்பாட்டு என்ற வகைமைக்குரிய இலக்கணமாக


பன்னிருப்பாட்டியலில் உழத்திப்பாட்டு என்ற வகைமைக்குரிய இலக்கணமாக,
<poem>
<poem>
''புரவலற் கூறி யவன்வா ழியவென்று
''புரவலற் கூறி யவன்வா ழியவென்று
Line 11: Line 11:
''எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே.”  
''எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே.”  
</poem>
</poem>
- என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆனால், ‘உழத்திப் பாட்டு’ பள்ளு இலக்கியமாகாது என்பது [[மு. அருணாசலம்|மு. அருணாசல]]த்தின் கருத்து.
- என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆனால் ‘உழத்திப் பாட்டு’ பள்ளு இலக்கியமாகாது என்பது [[மு. அருணாசலம்|மு. அருணாசல]]த்தின் கருத்து.
 
ஆனால் ‘[[நவநீதப் பாட்டியல்|நவநீதப்பாட்டியல்]]’ உழத்திப் பாட்டே பள்ளு என்கிறது.  
ஆனால், ‘[[நவநீதப் பாட்டியல்|நவநீதப்பாட்டியல்]]’ உழத்திப் பாட்டே, பள்ளு என்கிறது.  
<poem>
<poem>
''செவ்விதிற் பாடு மதுஉழத்திப் பாட்டு பள்ளுமென்பர்
''செவ்விதிற் பாடு மதுஉழத்திப் பாட்டு பள்ளுமென்பர்
Line 19: Line 18:
</poem>
</poem>
- என்ற பாட்டியல் பாடலில் இதனை உறுதி செய்கிறது.
- என்ற பாட்டியல் பாடலில் இதனை உறுதி செய்கிறது.
 
‘உழத்திப் பாட்டே பள்ளு’ என்றும், ‘பள்ளு வேறு; உழத்திப் பாட்டு வேறு’ என்றும் இரு வேறு கருத்துகள் ஆய்வாளர்களிடையே உள்ளன. உழத்தி வகைப் பாட்டுக்களே வளர்ந்து பள்ளு இலக்கியங்களாக மாறின என்ற கருத்தும் உள்ளது.
‘உழத்திப்பாட்டே பள்ளு’ என்றும், ‘பள்ளு வேறு; உழத்திப்பாட்டு வேறு’ என்றும் இருவேறு கருத்துகள் ஆய்வாளர்களிடையே உள்ளன. உழத்தி வகைப் பாட்டுக்களே வளர்ந்து பள்ளு இலக்கியங்களாக மாறின என்ற கருத்தும் உள்ளது.
== பள்ளு இலக்கியங்கள் பற்றிய செய்திகள் ==
== பள்ளு இலக்கியங்கள் பற்றிய செய்திகள் ==
“நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” என்ற சொல்மொழிக்கேற்ப நூற்றிற்கும் மேற்பட்ட பள்ளு வகை நூல்கள் உள்ளன. நெல் வயல்களில் வேலை செய்வோர், ஏர் பூட்டுதல் முதல் அறுவடை வரை பல்வேறு வகையான பாடல்களைப் பாடினர். இப்பாடல்களைப் பிற்காலத்தார் ஒருங்கு சேர்த்து ‘உழத்திப்பாட்டு’ அல்லது ‘பள்ளிசை’ என்று அழைத்தனர். பள்ளுப் பாட்டிற்குப் ‘பள்ளேசல்’, ‘பள்ளு நாடகம்’, ‘பள்ளிசை' என்ற பெயர்களும் உண்டு.
“நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” என்ற சொல்மொழிக்கேற்ப நூற்றிற்கும் மேற்பட்ட பள்ளு வகை நூல்கள் உள்ளன. நெல் வயல்களில் வேலை செய்வோர், ஏர் பூட்டுதல் முதல் அறுவடை வரை பல்வேறு வகையான பாடல்களைப் பாடினர். இப்பாடல்களைப் பிற்காலத்தார் ஒருங்கு சேர்த்து ‘உழத்திப் பாட்டு’ அல்லது ‘பள்ளிசை’ என்று அழைத்தனர். பள்ளுப் பாட்டிற்கு ‘பள்ளேசல்’, ‘பள்ளு நாடகம்’, ‘பள்ளிசை' என்ற பெயர்களும் உண்டு.
[[File:Saminatha Pallu.jpg|thumb|சாமிநாதப் பள்ளு]]
[[File:Saminatha Pallu.jpg|thumb|சாமிநாதப் பள்ளு]]
== முதல் பள்ளு நூல் ==
== முதல் பள்ளு நூல் ==
[[கமலை ஞானப்பிரகாசர்]] இயற்றிய ‘[[திருவாரூர்ப் பள்ளு]]’ காலத்தால் முற்பட்ட பள்ளு நூலாகக் கருதப்படுகிறது. இது ‘தியாகேசர் பள்ளு’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ‘ஆதிப்பள்ளு’, ‘ஞானப்பள்ளு’ என்ற பெயர்களும் உண்டு. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூலாகச் சிலரால் ‘முக்கூடற் பள்ளு’ முன்வைக்கப்படுகிறது. ‘மன்னார் மோகனப்பள்ளு' தான் தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் என்ற கருத்தும் உள்ளது.
[[கமலை ஞானப்பிரகாசர்]] இயற்றிய ‘[[திருவாரூர்ப் பள்ளு]]’ காலத்தால் முற்பட்ட பள்ளு நூலாகக் கருதப்படுகிறது. இது ‘தியாகேசர் பள்ளு’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ‘ஆதிப் பள்ளு’, ‘ஞானப் பள்ளு’ என்ற பெயர்களும் உண்டு. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூலாகச் சிலரால் ‘முக்கூடற் பள்ளு’ முன்வைக்கப்படுகிறது. ‘மன்னார் மோகனப் பள்ளு' தான் தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் என்ற கருத்தும் உள்ளது.
== பள்ளு நூல்களின் பாவினம் ==
== பள்ளு நூல்களின் பாவினம் ==
பள்ளு நூல்கள் வெண்பா, அகவல், விருத்தம், கலிப்பா, கலித்துறை, சிந்து போன்ற பாவினங்களால் இயற்றப்பட்டுள்ளன.
பள்ளு நூல்கள் வெண்பா, அகவல், விருத்தம், கலிப்பா, கலித்துறை, சிந்து போன்ற பாவினங்களில் இயற்றப்பட்டுள்ளன.
== பள்ளு இலக்கியங்களின் அடிப்படை ==
== பள்ளு இலக்கியங்களின் அடிப்படை ==
பள்ளு இலக்கியங்கள் பொதுவான கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டவை. பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக அவை அமைந்துள்ளன. பண்ணையில் நிகழும் உழவுத்தொழில்; பள்ளன் விவசாயத்தையும் மாடுகளையும் கவனிக்கும் முறை; மாட்டு வகைகள்; விதை வகைகள்; மூத்த பள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் இடையே நிகழும் சண்டை, சச்சரவுகள்; இந்தச் சண்டையில் பண்ணையார் தலையீடு செய்தல்; இறுதியில் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் சமரசமாகி பள்ளனோடு சேர்ந்து வாழ்தல் ஆகிய கதைக்கூறுகள் பொதுவாகப் பள்ளு இலக்கியங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்களில் இக்கதைக் கூறுகள் விரிக்கப்பெற்றும் சுருக்கப் பெற்றும் அமைந்திருக்கின்றன.
பள்ளு இலக்கியங்கள் பொதுவான கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டவை. பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக அவை அமைந்துள்ளன. பண்ணையில் நிகழும் உழவுத்தொழில்; பள்ளன் விவசாயத்தையும் மாடுகளையும் கவனிக்கும் முறை; மாட்டு வகைகள்; விதை வகைகள்; மூத்த பள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் இடையே நிகழும் சண்டை, சச்சரவுகள்; இந்தச் சண்டையில் பண்ணையார் தலையீடு செய்தல்; இறுதியில் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் சமரசமாகி பள்ளனோடு சேர்ந்து வாழ்தல் ஆகிய கதைக்கூறுகள் பொதுவாகப் பள்ளு இலக்கியங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்களில் இக்கதைக் கூறுகள் விரிக்கப்பெற்றும் சுருக்கப் பெற்றும் அமைந்திருக்கின்றன.
பள்ளு நூல்களில் அக்கால வேளாண் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
பள்ளு நூல்களில் அக்கால வேளாண் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
== பள்ளு இலக்கிய நூல்களின் பட்டியல் ==
== பள்ளு இலக்கிய நூல்களின் பட்டியல் ==
{| class="wikitable"
{| class="wikitable"
|'''எண்'''
|எண்
|'''நூலின் பெயர்'''
|நூலின் பெயர்
|'''இயற்றியவர் பெயர்'''
|இயற்றியவர் பெயர்  
|-
|-
|1
|1
Line 152: Line 148:
|-
|-
|29
|29
|சாமிநாதப்பள்ளு
|சாமிநாதப் பள்ளு
|சிவபெருமாள்கவி
|சிவபெருமாள்கவி
|-
|-
Line 192: Line 188:
|-
|-
|39
|39
|சேமூர்ப்பள்ளு
|சேமூர்ப் பள்ளு
|முருகதாசர்
|முருகதாசர்
|-
|-
Line 204: Line 200:
|-
|-
|42
|42
|ஞானப்பள்ளு
|ஞானப் பள்ளு
|தெல்லிப்பழை [[பேதுறுப்புலவர்|பேதறுப் புலவர்]]
|தெல்லிப்பழை [[பேதுறுப்புலவர்|பேதறுப் புலவர்]]
|-
|-
Line 217: Line 213:
|45
|45
|தருமசாத்தாப் பள்ளு
|தருமசாத்தாப் பள்ளு
|கவிகுஞ்சரபாரதி
|கவிகுஞ்சர பாரதி
|-
|-
|46
|46
Line 264: Line 260:
|-
|-
|57
|57
|திருவாரூர்ப் பள்ளு (ஞானப்பள்ளு)
|திருவாரூர்ப் பள்ளு (ஞானப் பள்ளு)
|கமலை ஞானப்பிரகாசர்
|கமலை ஞானப்பிரகாசர்
|-
|-
Line 272: Line 268:
|-
|-
|59
|59
|திருவேட்டை நல்லூர் ஐயனார்பள்ளு
|திருவேட்டை நல்லூர் ஐயனார் பள்ளு
|பொன் சுப்பிரமணிய நாவலர்
|பொன் சுப்பிரமணிய நாவலர்
|-
|-
Line 352: Line 348:
|-
|-
|79
|79
|முக்கூட்டுப்பள்ளு
|முக்கூட்டுப் பள்ளு
|பழனிச்சாமிபிள்ளை
|பழனிச்சாமி பிள்ளை
|-
|-
|80
|80
|[[முக்கூடற்பள்ளு]]
|[[முக்கூடற்பள்ளு]]
|என்னயினாப்புலவர்
|என்னயினாப் புலவர்
|-
|-
|81
|81
Line 381: Line 377:
|86
|86
|வேளாளர் பள்ளு
|வேளாளர் பள்ளு
|எட்டையபுரம் ஆ.கருத்தமுத்துப் பிள்ளை
|எட்டையபுரம் ஆ. கருத்தமுத்துப் பிள்ளை
|-
|-
|87
|87
Line 400: Line 396:
|-
|-
|91
|91
|திருநெல்வேலி வண்ணாரப் பேட்டை வேலாயுத அடிகள்பள்ளு
|திருநெல்வேலி வண்ணாரப் பேட்டை வேலாயுத அடிகள் பள்ளு
|ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
|ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
|-
|-
Line 415: Line 411:
* [https://anbuoviya.blogspot.com/2015/12/blog-post_72.html பள்ளு இலக்கியம்]  
* [https://anbuoviya.blogspot.com/2015/12/blog-post_72.html பள்ளு இலக்கியம்]  
* [https://www.keetru.com/index.php/2011-09-22-23-46-49/2011/16698-2011-09-23-02-16-07 சமய அரசியலும் பள்ளு இலக்கியமும்: கீற்று இணையதளம்]
* [https://www.keetru.com/index.php/2011-09-22-23-46-49/2011/16698-2011-09-23-02-16-07 சமய அரசியலும் பள்ளு இலக்கியமும்: கீற்று இணையதளம்]
{{First review completed}}
{{Finalised}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:15, 12 July 2023

முக்கூடற் பள்ளு
கஞ்சமி செட்டியார் பள்ளு

தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பள்ளு. இது மருத நில மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியம். உழவுத் தொழில் செய்யும் பள்ளர்களின் வாழ்க்கையைப் பற்றி பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கிய நூல்கள் எளிமையும் இனிமையும் வாய்ந்தவை. இவற்றின் காலம் பொ. யு. பதினாறாம் நூற்றாண்டு.

பள்ளு நூல்களின் இலக்கணம்

பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, வச்சணந்தி மாலை, பன்னிரு பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற இலக்கண நூல்களில் பள்ளு பற்றியக் குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை. தொல்காப்பியத்தில் பொருளதிகாரம், செய்யுளியல் இடம் பெற்றிருக்கும் ‘சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து' என்ற நூற்பாவில் ‘சேரிமொழி’ என்பது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. பன்னிரு பாட்டியலில் உழத்திப்பாட்டு என்ற வகைமைக்குரிய இலக்கணமாக

புரவலற் கூறி யவன்வா ழியவென்று
அகல்வயவ் தொழிலை யொருமை யுணர்ந்தனள்
எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே.”

- என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆனால் ‘உழத்திப் பாட்டு’ பள்ளு இலக்கியமாகாது என்பது மு. அருணாசலத்தின் கருத்து. ஆனால் ‘நவநீதப்பாட்டியல்’ உழத்திப் பாட்டே பள்ளு என்கிறது.

செவ்விதிற் பாடு மதுஉழத்திப் பாட்டு பள்ளுமென்பர்
நவ்வி எனக்கண் மடவீர் பிறவிதம் நாட்டுவரே.”

- என்ற பாட்டியல் பாடலில் இதனை உறுதி செய்கிறது. ‘உழத்திப் பாட்டே பள்ளு’ என்றும், ‘பள்ளு வேறு; உழத்திப் பாட்டு வேறு’ என்றும் இரு வேறு கருத்துகள் ஆய்வாளர்களிடையே உள்ளன. உழத்தி வகைப் பாட்டுக்களே வளர்ந்து பள்ளு இலக்கியங்களாக மாறின என்ற கருத்தும் உள்ளது.

பள்ளு இலக்கியங்கள் பற்றிய செய்திகள்

“நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” என்ற சொல்மொழிக்கேற்ப நூற்றிற்கும் மேற்பட்ட பள்ளு வகை நூல்கள் உள்ளன. நெல் வயல்களில் வேலை செய்வோர், ஏர் பூட்டுதல் முதல் அறுவடை வரை பல்வேறு வகையான பாடல்களைப் பாடினர். இப்பாடல்களைப் பிற்காலத்தார் ஒருங்கு சேர்த்து ‘உழத்திப் பாட்டு’ அல்லது ‘பள்ளிசை’ என்று அழைத்தனர். பள்ளுப் பாட்டிற்கு ‘பள்ளேசல்’, ‘பள்ளு நாடகம்’, ‘பள்ளிசை' என்ற பெயர்களும் உண்டு.

சாமிநாதப் பள்ளு

முதல் பள்ளு நூல்

கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய ‘திருவாரூர்ப் பள்ளு’ காலத்தால் முற்பட்ட பள்ளு நூலாகக் கருதப்படுகிறது. இது ‘தியாகேசர் பள்ளு’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ‘ஆதிப் பள்ளு’, ‘ஞானப் பள்ளு’ என்ற பெயர்களும் உண்டு. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூலாகச் சிலரால் ‘முக்கூடற் பள்ளு’ முன்வைக்கப்படுகிறது. ‘மன்னார் மோகனப் பள்ளு' தான் தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் என்ற கருத்தும் உள்ளது.

பள்ளு நூல்களின் பாவினம்

பள்ளு நூல்கள் வெண்பா, அகவல், விருத்தம், கலிப்பா, கலித்துறை, சிந்து போன்ற பாவினங்களில் இயற்றப்பட்டுள்ளன.

பள்ளு இலக்கியங்களின் அடிப்படை

பள்ளு இலக்கியங்கள் பொதுவான கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டவை. பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக அவை அமைந்துள்ளன. பண்ணையில் நிகழும் உழவுத்தொழில்; பள்ளன் விவசாயத்தையும் மாடுகளையும் கவனிக்கும் முறை; மாட்டு வகைகள்; விதை வகைகள்; மூத்த பள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் இடையே நிகழும் சண்டை, சச்சரவுகள்; இந்தச் சண்டையில் பண்ணையார் தலையீடு செய்தல்; இறுதியில் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் சமரசமாகி பள்ளனோடு சேர்ந்து வாழ்தல் ஆகிய கதைக்கூறுகள் பொதுவாகப் பள்ளு இலக்கியங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்களில் இக்கதைக் கூறுகள் விரிக்கப்பெற்றும் சுருக்கப் பெற்றும் அமைந்திருக்கின்றன. பள்ளு நூல்களில் அக்கால வேளாண் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பள்ளு இலக்கிய நூல்களின் பட்டியல்

எண் நூலின் பெயர் இயற்றியவர் பெயர்
1 அம்பலப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
2 ஆகவராமன் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
3 இராசநகர்ப் பள்ளு (எ) இராசைப் பள்ளு கவிகுஞ்சர பாரதியார்
4 இரும்புலிப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
5 உரிமை நகர்ப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
6 ஈரோடை ஐயனாரப்பன் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
7 ஈரோடைப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
8 எட்டையபுரப் பள்ளு (அ) தென் இளசைப் பள்ளு முத்துப் புலவர்
9 ஏசற் பள்ளு திருவிடங்கன் மாரிமுத்துப்பிள்ளை
10 ஏம்பல் முத்தையா சாமிப் பள்ளு மாபாடிக்கோட்டை அப்புசாமிப் புலவர்
11 ஏழுநகர் வணிகர் பேரில் மோகனப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
12 ஏழுநகரத்தார் பேரில் பள்ளு நாடகம் கடிகைப் புலவர்
13 கங்கநாயகர் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
14 கஞ்சமி செட்டியார் பள்ளு சின்னத்தம்பி வாத்தியார்
15 கட்டிமகிபன் பள்ளு நயினாசலவரதன்
16 கண்ணுடையம்மன் பள்ளு முத்துக்குட்டிப் புலவர்
17 கதிரைமலைப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
18 கழுகுமலைப் பள்ளு எட்டையபுரம் ஆ. கருத்த முத்துப் பிள்ளை
19 கன்னிவாடி சமீன்தார் பள்ளு காளிராமசாமிப் புலவர்
20 குருகூர்ப் பள்ளு (எ) பராங்குசப் பள்ளு ஆழ்வார் திருநகரி சடகோபப்புலவர்
21 குற்றாலப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
22 கூடற்பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
23 கொடுமளூர்ப் பள்ளு முதுகுளத்தூர் நல்லவீரப்பபிள்ளை
24 கொடுமுடிப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
25 கோட்டூர்ப் பள்ளு வெள்ளையப் புலவர்
26 சங்கிலி வீரபாண்டிய வன்னியனார் பள்ளு நகரம் முத்துசாமிக் கவிராயர்
27 சாத்துடையான் பள்ளு நல்லவீரப்பப் பிள்ளை
28 சாமத்தூர் மாவாணராய சுபேந்திரன் பள்ளு மோசுக்குடி குப்பண்ணப் புலவர்
29 சாமிநாதப் பள்ளு சிவபெருமாள்கவி
30 சிங்காபுரிப் பள்ளு அரிகரபுத்திரக் கவிராயர்
31 சிவகங்கை மருதப்பன் சேர்வைக்காரர் பள்ளு சிங்கவனம் சுப்பிரமணிய பாரதி
32 சிவசயிலப் பள்ளு ஆழ்வார் குறிச்சி அருணாச்சலக் கவிராயர்
33 சீர்காழிப் பள்ளு சீர்காழி சிதம்பரநாத முனிவர்
34 சீரங்கராயன் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
35 சுவாமிநாதபூபதிப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
36 செங்கோட்டுப் பள்ளு பொன்னுச் செல்லையா
37 செண்பகராமன் பள்ளு புனித இஞ்ஞாசியர்
38 செண்பக காளிங்கராயன் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
39 சேமூர்ப் பள்ளு முருகதாசர்
40 சேற்றூர்ப் பள்ளு இராசபாளையம் சங்கர மூர்த்திக் கவிராயர்
41 ஞானசித்தர் பள்ளு வேலாயுத சாமி
42 ஞானப் பள்ளு தெல்லிப்பழை பேதறுப் புலவர்
43 தஞ்சைப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
44 தண்டிகைக் கனகராயன் பள்ளு மாவை சின்னக்குட்டிப் புலவர்
45 தருமசாத்தாப் பள்ளு கவிகுஞ்சர பாரதி
46 தியாகராசப் பள்ளு அருணாச்சலப் புலவர்
47 தியாகேசர் பள்ளு சுப்பிரமணிய தாசர்
48 திருக்குற்றாலப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
49 திருக்கோட்டியூர்ப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
50 திருச்சுழியல் துணை மாலையம்மை பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
51 திருச்செந்திற் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
52 திருநீலகண்டன் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
53 திருப்புடைமருதூர்ப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
54 திருப்புவனவாயிற் பள்ளு சர்க்கரைப் புலவர்
55 திருமக்காப் பள்ளு கே.எம். அகமது முஹயதீன்
56 திருமலை முருகன் பள்ளு பெரியவன் கவிராயர்
57 திருவாரூர்ப் பள்ளு (ஞானப் பள்ளு) கமலை ஞானப்பிரகாசர்
58 திருவிடைமருதூர்ப் பள்ளு பிரான்மலை வெளிமங்கை பாகக்கவிராயர்
59 திருவேட்டை நல்லூர் ஐயனார் பள்ளு பொன் சுப்பிரமணிய நாவலர்
60 தில்லைப் பள்ளு தில்லை விடங்கன் மாரிமுத்துப்பிள்ளை
61 தென்காசிப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
62 தென்காசைப் பள்ளு இராமநாதகவிராயர்
63 நரசிங்கப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
64 நல்லாநங்கூர் சின்னணன் நல்லண்ணன் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
65 நாவாலிப் பள்ளு கதிர்காமர் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
66 நாவலியூர் வன்னிய சேகரன் பள்ளு நாவாலியூர் க.சோமசுந்தரப்புலவர்
67 நெல்லைப் பள்ளு சிதம்பரத் தொண்டைமான்
68 பழனிப்பட்டிச் செட்டிப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
69 பழனி வடிவேலர் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
70 பறாளை விநாயகர் பள்ளு யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
71 புதுவைப் பள்ளு புதுவை பொன்னுச் செட்டியார்
72 பெருநாழி வில்லியணைத் தேவர் பள்ளு முதுகுளத்தூர்ப் புலவர்
73 பொய்கைப் பள்ளு கடிகை அங்கமுத்துப்புலவர்
74 போடிநாயக்கனூர்ப் பள்ளு பெரியகுளம் சிந்தூரப் பொட்டுக் கவிராயர்
75 போரூர்ப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
76 மன்னார் மோகனப் பள்ளு தத்தவலிங்க ஐயர் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
77 மாந்தைப் பள்ளு சிதம்பரதாண்டவ மதுரகவிராயர்
78 மாவைப் பள்ளு பாலசுப்பிரமணியக் கவிராயர்
79 முக்கூட்டுப் பள்ளு பழனிச்சாமி பிள்ளை
80 முக்கூடற்பள்ளு என்னயினாப் புலவர்
81 முதலிக்காமிண்டன் பள்ளு பேரூராதினச் சுவடி எண்.191
82 மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
83 வடகரைப் பள்ளு கடிகைமுத்துப் புலவர்
84 விநாயகர் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
85 வேதாந்தப் பள்ளு ஆவுடை அக்காள்
86 வேளாளர் பள்ளு எட்டையபுரம் ஆ. கருத்தமுத்துப் பிள்ளை
87 வைசியப் பள்ளு சங்கரமூர்த்திப் புலவர்
88 வையாபுரிப் பள்ளு (பழநி பள்ளு ) வேலச்சின்னோ வையன்
89 தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
90 வைத்தியப் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
91 திருநெல்வேலி வண்ணாரப் பேட்டை வேலாயுத அடிகள் பள்ளு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
92 தம்பிலுவிற் பள்ளு மொட்டை வேலாப் போடியார்

உசாத்துணை


✅Finalised Page