under review

சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்)

From Tamil Wiki
கல்வளையந்தாதி

சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்) (1716-1780) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். யாழ்ப்பாண மக்களின் தேச வழமைச் சட்டத்தை திருத்தியவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் நல்லூரில் 1716-ல் வில்லவராய முதலியார் சின்னத்தம்பிப் புலவர் பிறந்தார். கூழங்கைத் தம்பிரான் முதலியார் வீட்டில் படித்து வந்த பாடல்களை ஏழு வயதில் அவதானம் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிறு வயதில் கவி புனையும் ஆற்றல் கொண்டவராதலால் வரககவி என்று அழைக்கப்பட்டார். இவர் இயற்றிய பிரபந்தங்களில் இலக்கண அறிவும், இலக்கியப் பயிற்சியும், புலமையும் வெளிப்படும். பதினைந்து வயதில் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே 'மறைசையந்தாதி' பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் அவரைப் பாராட்டினார். அந்தாதி, கோவை, பள்ளு முதலிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். 'கல்வளை அந்தாதி', 'மறசை அந்தாதி', 'கரவை வேலன் கோவை', பறாளை விநாயகர் பள்ளு ஆகியவை இவர் இயற்றிய நூல்கள்.

மறைவு

சின்னத்தம்பிப் புலவர் 1780-ல் இலங்கை நல்லூரில் காலமானார்.

நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் பிரபந்தங்கள்

நூல்கள் பட்டியல்

அந்தாதி
  • கல்வளை அந்தாதி
  • மறசை அந்தாதி
கோவை
  • கரவை வேலன் கோவை
பள்ளு
  • பறாளை விநாயகர் பள்ளு
கும்மி
  • நாலுமந்திரிகும்மி

உசாத்துணை


✅Finalised Page