under review

பிரபந்த மரபியல்

From Tamil Wiki
பிரபந்த மரபியல்

பிரபந்த மரபியல் (பொ.யு 19-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் ஒன்று.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பதிப்பு

மு.அருணாச்சலம் 1976-ல் இந்நூலை பதிப்பித்துள்ளார். பாட்டியல் குறித்த மிக விரிவான முன்னுரை இந்நூலின் முகப்பில் உள்ளது[1].

நூலமைப்பு

பிரபந்த மரபியலில் 60 நூற்பாக்கள் உள்ளன. முதல் 40 நூற்பாக்களில் 66 பிரபந்தங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. எஞ்சியவை பொதுவான செய்திகளைக் கூறுகின்றன. பெருங்காப்பியம் ,புராணம் ஆகியவை வகுத்துரைக்கப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களுக்கு 12 ராசிகளைப் பகுத்துக்கூறுதல் இந்நூலின் தனித்தன்மை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page