சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை: Difference between revisions
(Corrected text format issues) Tag: Reverted |
(Corrected Category:வாத்திய இசைக்கலைஞர்கள் to Category:வாத்திய இசைக்கலைஞர்) |
||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 3: | Line 3: | ||
==இளமை, கல்வி== | ==இளமை, கல்வி== | ||
மாயூரத்துக்கு அருகில் உள்ள கீரனூரில் இருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள சிறுபுலியூர் என்ற சிற்றூரில் கந்தஸ்வாமி பிள்ளை - மாரிமுத்தம்மாள் ஆகியோரின் மகனாக ஜூன் 27, 1896 அன்று கண்ணப்பா பிள்ளை பிறந்தார். | மாயூரத்துக்கு அருகில் உள்ள கீரனூரில் இருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள சிறுபுலியூர் என்ற சிற்றூரில் கந்தஸ்வாமி பிள்ளை - மாரிமுத்தம்மாள் ஆகியோரின் மகனாக ஜூன் 27, 1896 அன்று கண்ணப்பா பிள்ளை பிறந்தார். | ||
கண்ணப்பா பிள்ளை [[கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை]]யுடன் சேர்ந்து கீரனூர் முத்துப்பிள்ளை என்பவரிடம் வாய்ப்பாட்டிலும் நாதஸ்வரத்திலும் பயிற்சி பெற்றார். பின்னர் சின்னத்தம்பி பிள்ளை காஞ்சீபுரம் சென்றதும், [[மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை]]யிடம் மேற்பயிற்சி பெற்றார். | கண்ணப்பா பிள்ளை [[கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை]]யுடன் சேர்ந்து கீரனூர் முத்துப்பிள்ளை என்பவரிடம் வாய்ப்பாட்டிலும் நாதஸ்வரத்திலும் பயிற்சி பெற்றார். பின்னர் சின்னத்தம்பி பிள்ளை காஞ்சீபுரம் சென்றதும், [[மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை]]யிடம் மேற்பயிற்சி பெற்றார். | ||
==தனிவாழ்க்கை== | ==தனிவாழ்க்கை== | ||
கண்ணப்பா பிள்ளைக்கு குந்தலாம்பாள் என்ற மூத்த சகோதரியும் பொன்னையா என்ற தம்பியும் இருந்தனர். | கண்ணப்பா பிள்ளைக்கு குந்தலாம்பாள் என்ற மூத்த சகோதரியும் பொன்னையா என்ற தம்பியும் இருந்தனர். | ||
திருவாரூர் புலிவலத்தை சேர்ந்த பாக்கியத்தம்மாள் என்பவரை கண்ணப்பா பிள்ளை மணந்தார். இவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தி பிள்ளை என்ற மகனும் பட்டம்மாள் என்ற மகளும் பிறந்தனர். தக்ஷிணாமூர்த்தி பிள்ளை புலிவலம் கிராம முனிசீப்பாக இருந்தவர். பட்டம்மாள் நாதஸ்வரக் கலைஞர் [[திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை]]யின் மனைவி. | திருவாரூர் புலிவலத்தை சேர்ந்த பாக்கியத்தம்மாள் என்பவரை கண்ணப்பா பிள்ளை மணந்தார். இவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தி பிள்ளை என்ற மகனும் பட்டம்மாள் என்ற மகளும் பிறந்தனர். தக்ஷிணாமூர்த்தி பிள்ளை புலிவலம் கிராம முனிசீப்பாக இருந்தவர். பட்டம்மாள் நாதஸ்வரக் கலைஞர் [[திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை]]யின் மனைவி. | ||
==இசைப்பணி == | ==இசைப்பணி == | ||
கண்ணப்பா பிள்ளையும் சின்னத்தம்பி பிள்ளையும் இணைந்து கச்சேரிகள் செய்யத்தொடங்கினார். இவர்கள் 'கீரனூர் சகோதரர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமாக சில இசைத்தட்டுக்கள் பதிவு செய்திருக்கின்றனர். இவர்கள் கீர்த்தனைகள் வாசிப்பதில் காணப்பட்ட ஒருங்கிணைவும், ராக ஆலாபனை மற்றும் பல்லவியில் கடினமான லய வேலைப்பாடுகளும் புகழ் பெற்றவை. | கண்ணப்பா பிள்ளையும் சின்னத்தம்பி பிள்ளையும் இணைந்து கச்சேரிகள் செய்யத்தொடங்கினார். இவர்கள் 'கீரனூர் சகோதரர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமாக சில இசைத்தட்டுக்கள் பதிவு செய்திருக்கின்றனர். இவர்கள் கீர்த்தனைகள் வாசிப்பதில் காணப்பட்ட ஒருங்கிணைவும், ராக ஆலாபனை மற்றும் பல்லவியில் கடினமான லய வேலைப்பாடுகளும் புகழ் பெற்றவை. | ||
1927- | |||
1927-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் நடத்திய இசை மாநாட்டில் கீரனூர் சகோதரர்கள் மேளமும் [[மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை]] மேளமும் நடைபெற்றன. அங்கு இவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. தருமபுரம் ஆதீனகர்த்தரும் தங்கப் பதக்கங்களும் தங்கக் கைச்சங்கிலிகளும் வழங்கியுள்ளார். வருடந்தோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனையில் தவறாமல் கலந்து கொள்வதை கீரனூர் சகோதரர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். | |||
சில சமயம் கீரனூர் சகோதரர்கள் இடையே மனவேற்றுமை ஏற்பட்டு பிரிந்தும் கச்சேரிகள் செய்திருக்கிறார்கள். அது போன்ற காலத்தில் சின்னத்தம்பி பிள்ளை தவில் வாசிக்க, வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளையை அழைத்துச் செல்வது வழக்கம். கண்ணப்பா பிள்ளை திருக்கண்ணபுரம் குமாரஸ்வாமி பிள்ளையை அழைத்துச் செல்வார். எத்தனை மனவேற்றுமை ஏற்பட்டாலும் மீண்டும் விரைவிலேயே இருவரும் ஒன்று சேர்ந்து விடுவதும் வழக்கமாக இருந்தது. | சில சமயம் கீரனூர் சகோதரர்கள் இடையே மனவேற்றுமை ஏற்பட்டு பிரிந்தும் கச்சேரிகள் செய்திருக்கிறார்கள். அது போன்ற காலத்தில் சின்னத்தம்பி பிள்ளை தவில் வாசிக்க, வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளையை அழைத்துச் செல்வது வழக்கம். கண்ணப்பா பிள்ளை திருக்கண்ணபுரம் குமாரஸ்வாமி பிள்ளையை அழைத்துச் செல்வார். எத்தனை மனவேற்றுமை ஏற்பட்டாலும் மீண்டும் விரைவிலேயே இருவரும் ஒன்று சேர்ந்து விடுவதும் வழக்கமாக இருந்தது. | ||
======மாணவர்கள்====== | ======மாணவர்கள்====== | ||
Line 35: | Line 39: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
*மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | *மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:33:50 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வாத்திய | [[Category:வாத்திய இசைக்கலைஞர்]] |
Latest revision as of 12:22, 17 November 2024
சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை (ஜூன் 27, 1896 - ஜூலை 13, 1944) ஒரு நாதஸ்வரக் கலைஞர். "கீரனூர் சகோதரர்கள்" என்றறியப்பட்ட இருவரில் ஒருவர்.
இளமை, கல்வி
மாயூரத்துக்கு அருகில் உள்ள கீரனூரில் இருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள சிறுபுலியூர் என்ற சிற்றூரில் கந்தஸ்வாமி பிள்ளை - மாரிமுத்தம்மாள் ஆகியோரின் மகனாக ஜூன் 27, 1896 அன்று கண்ணப்பா பிள்ளை பிறந்தார்.
கண்ணப்பா பிள்ளை கீரனூர் சின்னத்தம்பி பிள்ளையுடன் சேர்ந்து கீரனூர் முத்துப்பிள்ளை என்பவரிடம் வாய்ப்பாட்டிலும் நாதஸ்வரத்திலும் பயிற்சி பெற்றார். பின்னர் சின்னத்தம்பி பிள்ளை காஞ்சீபுரம் சென்றதும், மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையிடம் மேற்பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
கண்ணப்பா பிள்ளைக்கு குந்தலாம்பாள் என்ற மூத்த சகோதரியும் பொன்னையா என்ற தம்பியும் இருந்தனர்.
திருவாரூர் புலிவலத்தை சேர்ந்த பாக்கியத்தம்மாள் என்பவரை கண்ணப்பா பிள்ளை மணந்தார். இவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தி பிள்ளை என்ற மகனும் பட்டம்மாள் என்ற மகளும் பிறந்தனர். தக்ஷிணாமூர்த்தி பிள்ளை புலிவலம் கிராம முனிசீப்பாக இருந்தவர். பட்டம்மாள் நாதஸ்வரக் கலைஞர் திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளையின் மனைவி.
இசைப்பணி
கண்ணப்பா பிள்ளையும் சின்னத்தம்பி பிள்ளையும் இணைந்து கச்சேரிகள் செய்யத்தொடங்கினார். இவர்கள் 'கீரனூர் சகோதரர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமாக சில இசைத்தட்டுக்கள் பதிவு செய்திருக்கின்றனர். இவர்கள் கீர்த்தனைகள் வாசிப்பதில் காணப்பட்ட ஒருங்கிணைவும், ராக ஆலாபனை மற்றும் பல்லவியில் கடினமான லய வேலைப்பாடுகளும் புகழ் பெற்றவை.
1927-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் நடத்திய இசை மாநாட்டில் கீரனூர் சகோதரர்கள் மேளமும் மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை மேளமும் நடைபெற்றன. அங்கு இவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. தருமபுரம் ஆதீனகர்த்தரும் தங்கப் பதக்கங்களும் தங்கக் கைச்சங்கிலிகளும் வழங்கியுள்ளார். வருடந்தோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனையில் தவறாமல் கலந்து கொள்வதை கீரனூர் சகோதரர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
சில சமயம் கீரனூர் சகோதரர்கள் இடையே மனவேற்றுமை ஏற்பட்டு பிரிந்தும் கச்சேரிகள் செய்திருக்கிறார்கள். அது போன்ற காலத்தில் சின்னத்தம்பி பிள்ளை தவில் வாசிக்க, வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளையை அழைத்துச் செல்வது வழக்கம். கண்ணப்பா பிள்ளை திருக்கண்ணபுரம் குமாரஸ்வாமி பிள்ளையை அழைத்துச் செல்வார். எத்தனை மனவேற்றுமை ஏற்பட்டாலும் மீண்டும் விரைவிலேயே இருவரும் ஒன்று சேர்ந்து விடுவதும் வழக்கமாக இருந்தது.
மாணவர்கள்
சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- யாழ்ப்பாணம் நல்லூர் முருகையா பிள்ளை
- அப்புலிங்கம் பிள்ளை
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
கீரனூர் சகோதரர்களுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- பெருஞ்சேரி கோவிந்தஸ்வாமி பிள்ளை
- காரைக்கால் பழனிவேல் பிள்ளை
- திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை
- அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை
- கும்பகோணம் தாதக்கிருஷ்ணன்
- காவாலக்குடி சோமுப் பிள்ளை
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- மன்னார்குடி நடேச பிள்ளை
- விராலிமலை முத்தையா பிள்ளை
- திருக்கடையூர் சின்னையா பிள்ளை
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
மறைவு
சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை ஜுலை 13, 1944 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:50 IST