14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
சமயம், தத்துவம் சார்ந்த நூல்கள் அதிகம் வெளியான நூற்றாண்டு பதினான்காம் நூற்றாண்டு. உரை நூல்கள் பலவும் வெளியாகின. அந்நூல்கள் பற்றிய பட்டியல் இது.
பதினான்காம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
| எண் | நூல்கள் | ஆசிரியர்கள் |
|---|---|---|
| 1 | உண்மை நெறி விளக்கம் | உமாபதி சிவாசாரியார் |
| 2 | கொடிக்கவி | உமாபதி சிவாச்சாரியார் |
| 3 | கோயிற் புராணம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 4 | சங்கற்ப நிராகரணம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 5 | சிவப்பிரகாசம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 6 | சேக்கிழார் புராணம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 7 | திருமுறைகண்ட புராணம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 8 | திருமுறைத் திரட்டு | உமாபதி சிவாச்சாரியார் |
| 9 | திருவருட் பயன் | உமாபதி சிவாச்சாரியார் |
| 10 | திருத்தொண்டர் புராண சாரம் | உமாபதி சிவாச்சாரியார் |
| 11 | நெஞ்சுவிடு தூது | உமாபதி சிவாச்சாரியார் |
| 12 | போற்றிப் பஃறொடை வெண்பா | உமாபதி சிவாச்சாரியார் |
| 13 | வினா வெண்பா | உமாபதி சிவாச்சாரியார் |
| 14 | அஷ்ட தச ரகசியங்கள் | பிள்ளை லோகாசாரியார் |
| 15 | வசன பூஷணம் | பிள்ளை லோகாசாரியார் |
| 16 | அமலனாதிபிரான் வியாக்கியானம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 17 | அருளிச்செயல் ரகசியம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 18 | ஆசார்ய ஹிருதயம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 19 | கண்ணிநுண்சிறுத்தாம்பு வியாக்கியானம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 20 | திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 21 | திருவந்தாதி வியாக்கியானம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 22 | மாணிக்க மாலை | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் |
| 23 | ஏகாம்பரநாதர் வண்ணம் | இரட்டைப் புலவர்கள் |
| 24 | காஞ்சி ஏகாம்பரநாதர் உலா | இரட்டைப்புலவர் |
| 25 | தியாகேசர் பஞ்சரத்தினம் | இரட்டைப்புலவர் |
| 26 | திருஆமாத்தூர்க் கலம்பகம் | இரட்டைப்புலவர் |
| 27 | தில்லைக் கலம்பகம் | இரட்டைப்புலவர் |
| 28 | மூவர் அம்மானைப் பாடல்கள் | இரட்டைப்புலவர் |
| 29 | கந்த புராணம் | கச்சியப்ப சிவாசாரியார் |
| 30 | அகத்தியர் தேவாரத் திரட்டு | சிவாலய முனிவர் |
| 31 | மேருமந்தர புராணம் | வாமன முனிவர் |
| 32 | நீலகேசி உரை | வாமன முனிவர் |
| 33 | இருபா இருபஃது உரை | சீகாழித் தத்துவநாதர் |
| 34 | உண்மைநெறி விளக்கம் | சீகாழித் தத்துவநாதர் |
| 35 | உரிச்சொல் நிகண்டு | காங்கேயர் |
| 36 | கலித்தொகை உரை | நச்சினார்க்கினியர் |
| 37 | சீவக சிந்தாமணி உரை | நச்சினார்க்கினியர் |
| 38 | தொல்காப்பிய உரை | நச்சினார்க்கினியர் |
| 39 | பத்துப்பாட்டு உரை | நச்சினார்க்கினியர் |
| 40 | சிவவாக்கியம் | சிவவாக்கியர் |
| 41 | சிவானந்தமாலை | சம்பந்த முனிவர் |
| 42 | சிற்றம்பல நாடிகள் தாலாட்டு | சம்பந்த முனிவர் |
| 43 | திருவாரூர்ப் புராணம் | சம்பந்த முனிவர் |
| 44 | சிற்றம்பல நாடிகள் வெண்பா | சம்பந்த முனிவர் |
| 45 | சீவ சம்போதனை | தேவேந்திர மாமுனிவர் |
| 46 | தத்துவப் பிரகாசம் | சீகாழித் தத்துவப் பிரகாசர் |
| 47 | துகளறுபோதக் கட்டளை | சீகாழித் தத்துவப் பிரகாசர் |
| 48 | துகளறு போதம் | காழி பழுதைகட்டி சிற்றம்பல நாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 49 | திருப்புன்முறுவல் | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 50 | சிவப்பிரகாசக் கருத்துரை சூத்திரம் | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 51 | திருச்செந்தூர்ச் சுப்பிரமணியர் அகவல் | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 52 | வினா வெண்பா | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 53 | திருச்சிற்றம்பல நாடிகள் கட்டளை | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 54 | இரங்கல் மூன்று | காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள் |
| 55 | தேசிகப் பிரபந்தம் | வேதாந்த தேசிகர் |
| 56 | நவநீதப் பாட்டியல் | நவநீத நாடர் |
| 57 | ஞானப் பூசாகரணம் | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 58 | ஞான பூசாவிதி் | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 59 | ஞான தீக்ஷாவிதி | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 60 | ஞான அந்தியேட்டி | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 61 | போஜன விதி | அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர் |
| 62 | நன்னூல் உரை | மயிலைநாதர் |
| 63 | நீலகேசி விருத்தியுரை | சமய திவாகர முனிவர் |
| 64 | ஞானக் குறள் | ஒளவையார் |
| 65 | விநாயகர் அகவல் | ஒளவையார் |
| 66 | அசதிக் கோவை | ஒளவையார் |
| 67 | பந்தன் அந்தாதி | ஒளவையார் |
| 68 | பட்டினத்தார் பாடல்கள் | பட்டினத்தார் |
| 69 | பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு | பட்டினத்தார் |
| 70 | பத்திரகிரியார் பாடல்கள் | பத்திரகிரியார் |
| 71 | அருட்புலம்பல் | பத்திரகிரியார் |
| 72 | திருச்செந்தூர்ப் புராணம் | வென்றிமாலைக் கவிராயர் |
| 73 | சித்தாந்த சாரம் | பரம முனிவர் |
| 74 | திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் | தொல்காப்பியத் தேவர் |
| 75 | திருநூற்றந்தாதி | அவிரோதி ஆழ்வார் |
| 76 | சப்த காதை | விழா சோலைப் பிள்ளை |
| 77 | சரகோடி மாலை | போசராசர் |
| 78 | ஸ்ரீ வில்லிபுத்தூரார் மகாபாரதம் | ஸ்ரீ வில்லிபுத்தூரார் |
| 79 | மதுரைக் கோவை | சங்கர நாராயணர் |
| 80 | பிள்ளை அந்தாதி | ஸ்ரீ நயினார் ஆசார்யர் |
| 81 | மெய்மொழிச் சரிதை | மெய்மொழித் தேவர் |
| 82 | தத்துவ விளக்கம் | சம்பந்த சரணாலயர் |
| 83 | ரூப சொரூப அகவல் | காவை அம்பலநாதத் தம்பிரான் |
| 84 | பிரசாத அகவல் | காவை அம்பலநாதத் தம்பிரான் |
| 85 | சிவானந்த மாலை | காழி பழுதைகட்டி சம்பந்த முனிவர் |
| 86 | ஜைன இராமாயணம் | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 87 | பகவத்கீதை வெண்பா | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 88 | கருமாணிக்கன் கோவை | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 89 | களவியற் காரிகை | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 90 | திருக்கலம்பகம் | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 91 | திருநூற்றந்தாதி | அவிரோதி ஆழ்வார் |
| 92 | வரையறுத்த பாட்டியல் | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 93 | பல்சந்தமாலை | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 94 | மெய்ஞான விளக்கம் | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
| 95 | கப்பல் கோவை | ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பதினான்காம் நூற்றாண்டு: மு. அருணாசலம்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச் சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 08:50:11 IST