பண்டிதர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பண்டிதர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அ. சந்திரசேகர பண்டிதர்: அ. சந்திரசேகர பண்டிதர் (இறப்பு: அக்டோபர் 26, 1879) பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் அறிஞர்
- அம்பலவாண பண்டிதர்: அம்பலவாண பண்டிதர் (1814 - 1879) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- அயோத்திதாச பண்டிதர்: அயோத்திதாச பண்டிதர் (காத்தவராயன்) (மே 20, 1845 – மே 5, 1914) ( அயோத்திதாஸ பண்டிதர், அயோத்திதாசர்) தமிழறிஞர், பண்பாட்டுச் சிந்தனையாளர், தலித் அரசியல் முன்னோடி
- அயோத்திதாசப் பண்டிதர் விருது: தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது
- ஆபிரகாம் பண்டிதர்: ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 - ஆகஸ்ட் 31, 1919) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை இயக்கத்தின் முன்னோடி
- ஒசிங்ரன் பண்டிதர்: ஒசிங்ரன் பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். சைவ அறிஞர்.
- கணேச பண்டிதர்: கணேச பண்டிதர் (1843-1881) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- கவிராச பண்டிதர்: கவிராச பண்டிதர் (வீரை கவிராச பண்டிதர்) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். வடமொழி நூலான செளந்தரியலகரியை மொழிபெயர்த்தார்
- குஞ்சித்தம்பி பண்டிதர்: குஞ்சித்தம்பி பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், நாடகக் கலைஞர்.
- குணவீர பண்டிதர்: குணவீர பண்டிதர் (பொ. யு. 12-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சமண சமயத்தைச் சேர்ந்தவர். நேமிநாதம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்
- சதாசிவ பண்டிதர்: சதாசிவ பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- சந்திரசேகர கவிராச பண்டிதர்: சந்திரசேகர கவிராச பண்டிதர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்
- சிவப்பிரகாச பண்டிதர்: சிவப்பிரகாச பண்டிதர் (1864-1916) ஈழத்து தமிழ்ப் புலவர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.
- சுப்பிரமணிய பண்டிதர்: சுப்பிரமணிய பண்டிதர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) இசைவாணர், தமிழ்ப் புலவர். பலவகை கர்னாடக இசைப்பாடல்கள் இயற்றி இசையமைத்தவர்
- சுவாமிநாத பண்டிதர்: சுவாமிநாத பண்டிதர் (வண்ணார்பண்ணை சுவாமிநாத பண்டிதர்) (மறைவு: 1937) சைவ நூல்களை அச்சில் கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார்
- சோமாஸ்கந்த பண்டிதர்: சோமாஸ்கந்த பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், உரையாசிரியர்.
- தே. அ. ஞானாபரணம் பண்டிதர்: தே. அ. ஞானாபரணம் பண்டிதர் (1885-1955) கவிஞர், எழுத்தாளர். தமிழாசிரியராகப் பணியாற்றினார்
- முருகேசப் பண்டிதர்: முருகேசப் பண்டிதர் (பூ. முருகேச பண்டிதர்) (1880 - செப்டம்பர் 3, 1898) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், தமிழாசிரியர், கவிஞர்
- வரதராச பண்டிதர்: வரதராச பண்டிதர்(வரதப்பண்டிதர்) (1656 - 1716) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், ஜோதிடர், வைத்தியர்
- வீ. அயோத்திதாசப் பண்டிதர்: வீ. அயோத்திதாசப் பண்டிதர் (1830-1892 ) வல்லக்காளத்தி அயோத்திதாசப் பண்டிதர். சித்தமருத்துவர், தமிழறிஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.