under review

ஒசிங்ரன் பண்டிதர்

From Tamil Wiki
பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)

ஒசிங்ரன் பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். சைவ அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஒசிங்ரன் பண்டிதர் வட்டுக்கோட்டையில் பிறந்தார். வட்டுக்கோட்டை சாஸ்திரக் கல்லூரியின் தலைவராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். சைவசமய சாத்திர நூல்களையும் கொள்கைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டார். அக்கல்லூரியில் கந்தபுராணத்தினை முதன்முதலாக இலக்கிய பாடமாக வைத்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஒசிங்ரன் பண்டிதர் தத்துவக் கட்டளை, சிவஞானபோதம், சிவட்பிரகாசம் ஆகிய நூல்களை 1854-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சிவஞானபோதம் முதலான நூல்களை மொழிபெயர்த்த நல்லசாமிப் பிள்ளையவர்களுக்கு இவை பெரிதும் பயன்பட்டன.

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • தத்துவக் கட்டளை
  • சிவஞானபோதம்
  • சிவட்பிர காசம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Nov-2022, 09:38:00 IST