சோமாஸ்கந்த பண்டிதர்
From Tamil Wiki
- பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)
சோமாஸ்கந்த பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், உரையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சோமாஸ்கந்த பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் தாவடியில் பிறந்தார். கணேசையருடன் சேர்ந்து வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடம் கல்வி கற்றார். யாழ்ப்பாணத்தில் அமைந்த சித்தாந்த சபையில் செயலாளராகப் பணிசெய்தார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவருடன் இந்தியாவிற்கு பயணம் சென்றார்.
இலக்கிய வாழ்க்கை
சோமாஸ்கந்த பண்டிதர் குமாரசுவாமிப் புலவருடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் சென்றபோது பாண்டித்துரைத் தேவர் கேட்ட ராமாயணச் செய்யுள்களுக்கு பொருள் கூறினார். கணேசையர் இயற்றிய இரகுவமிச உரைக்குச் சிறப்புக் கவி எழுதினார்
மறைவு
சோமாஸ்கந்த பண்டிதர் 1931-ல் காலமானார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Apr-2023, 18:16:49 IST