under review

கணேச பண்டிதர்

From Tamil Wiki
பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)

கணேச பண்டிதர் (1843-1881) ஈழத்து தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கணேச பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணார்பண்ணையில் 1843-ல் பிறந்தார். தமிழிலக்கண விலக்கியங்கள், வடமொழி வியாகரணங்கள், காவியங்களில் புலமை பெற்றார். திருவண்ணமலை ஆதீனத்தில் கணேச பண்டிதர் ஆதீனவித்துவானாக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இந்தியாவில் இளையாற்றங்குடியில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், வணிகர்கள் வேண்டிக் கொண்டதால் அத்தலத்தின் மான்மியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, "இளசைப் புராணம்" என விருத்தப்பாக்களால் இயற்றினார்.

இறப்பு

கணேச பண்டிதர் 1881-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • இளசைப் புராணம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2023, 06:16:37 IST