under review

கலாமோகினி இதழ் தொகுப்பு

From Tamil Wiki
கலாமோகினி இதழ் தொகுப்பு

கலாமோகினி, ஓர் இலக்கிய இதழ். திருச்சியில் இருந்து வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் வி.ஆர். ராஜகோபாலன். கவிதை, கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல பிரிவுகளுக்கும் இந்த இதழ் இடமளித்தது. இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ‘கலாமோகினி இதழ் தொகுப்பு’ என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பதிப்பு, வெளியீடு

1940-களில், மணிக்கொடி இதழ் தற்காலிகமாக நின்றுபோனது. இலக்கிய உலகில் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை நிறைவு செய்வதற்காகத் தோன்றிய இதழ் கலாமோகினி. ஜூலை 1, 1942 முதல், திருச்சியில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த இந்த இதழின் ஆசிரியர் சாலிவாஹனன் என்னும் வி. ஆர். ராஜகோபாலன். மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் இதில் எழுதினர். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கிய உலகின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இவ்விதழ் இடமளித்தது.

இவ்விதழில் வெளியான தேர்ந்தெடுத்த படைப்புகளை ‘கலாமோகினி இதழ் தொகுப்பு’ என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. இதனைத் தொகுத்தவர்கள் சிட்டி (பெ.கோ. சுந்தர்ராஜன்) மற்றும் ப. முத்துக்குமாரசாமி. இந்தத் தொகுப்பு நூலின் முதல் பதிப்பு 2003-ல் வெளியானது.

உள்ளடக்கம்

சிறுகதைகள், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கு.ப.ரா. நினைவு மலர் என்ற பகுதியில், எழுத்தாளர்கள் பலரும் கு.ப. ராஜகோபாலன் உடனான தங்கள் நினைவுகளை, அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கவிதைகள்
சாகா மருந்து ந. பிச்சமூர்த்தி
இரவின் இரகசியம் இ. சரவணமுத்து
யோகம் கலைதல் கு.ப. ராஜகோபாலன்
கலகக் கனவு கலைவாணன்
யாத்திரை அப்புலிங்கம்
ஏழுலகிற்கும் ஓர் சந்திரிகை சாலிவாகனன்
பாம்பும் பிடாரனும் நாணல்
வேட்கை சாலிவாகனன்
ஈசன் அருளிதுவே நல்லை இளங்கோவன்
கட்டுரைகள்
காலம் வல்லிக்கண்ணன்
எழுத மாட்டேன் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி
பரிசில் வாழ்க்கை வி. ரா. ரா.
மாரீச இலக்கியம் வல்லிக்கண்ணன்
காவேரிக் கரையில் கே. ஸ்ரீ
மாரீச இலக்கியம் கலைவாணன்
பாரதியின் வசன கவிதை ந. பிச்சமூர்த்தி
நாவல் ந. பிச்சமூர்த்தி
காதல்-I சாலிவாகனன்
காதல்-II சாலிவாகனன்
இவர் நமது அதிதி அப்புலிங்கம்
இவர் நமது அதிதி எம். வி. வெங்கட்ராம்
இவர் நமது அதிதி தி. ஜ. ர.
இவர் நமது அதிதி சங்கு சுப்ரமணியம்
பசி வே. சாரநாதன்
உசித வார்த்தை எஸ். கலியாணசுந்தரையர்
சண்டைபோட வந்திருக்கிறேன் எஸ். கல்யாணசுந்தரையர்
இதுக்கா பணம் ? பெயர் காணப்படவில்லை
சிறுகதைகள்
எவன் பிறந்திருக்கிறானோ? கு.ப. ராஜகோபாலன்
தோழி எம்.வி. வெங்கட்ராம்
தலைப்பால் துடைத்த வடு கி.ரா. கிருஷ்ணமூர்த்தி
மரண தாகம் கி.ரா. கோபாலன்
பிரிவினை (ருஷ்யக்கதை] பி.கோதண்டராமன் (மொ.பெ.)
கூட்டுக்கு வெளியே பூவாளூர் சுந்தரராமன்
கலையும் பெண்ணும் ந. பிச்சமூர்த்தி
படகோனியாவில் புனர்வசு
பஞ்சவர்ணக்கிளி கொத்தமங்கலம் சுப்பு
விதியும் மதியும்-1 க.நா. சுப்ரமணியம்
விதியும் மதியும்-2 க.நா. சுப்ரமணியம்
புயல் ஓய்ந்தது சேது அம்மாள்
வாழ்க்கையும் லக்ஷியமும் பி.வி. சுப்ரமணியம்
நடக்குமா? பெ.கோ. சுந்தரராஜன்
கனவு கலைந்தது பி.எஸ்.பார்த்தசாரதி
மாகேஸ்வரி ஜெயம்
பக்தி செய்தது கண்ணாடி
ஊர்மிளை தி.ஜானகிராமன்
தாகம் தீர்ந்ததா? பத்மபாரதி
பலன் இது வி. பட்டாபி
இது வசந்தம் ஏ.எஸ்.ரங்கனாதாச்சாரி
பலி ஏ.எஸ்.ஆர்.சிரோமணி
ஏன் கசப்பு? டி.வி. சுவாமிநாதன்
அரைகுறை ஸ்வாமிநாத ஆத்ரேயன்
சந்தேகம் எஸ். ஸ்வாமிநாதன்
புனர் ஜன்மம் (ஹிந்தி) தி.கோ. பத்ருஸ்வாமி (மொ.பெ.)
தனிக் குடித்தனம் கிட்டா
மகரந்தம் தாம்பரம் க.பஞ்சாபகேசன்
மணவாளன் குகன்
இது ஒரு வாழ்வு பி.கோதண்டராமன்
சோதனை கிருஷ்ண ஸ்ரீநிவாஸ்
சிறிது வெளிச்சம் கு.ப.ராஜகோபாலன்
சின்னத்தனம் கரிச்சான் குஞ்சு
கு.ப.ரா. நினைவு மலர்
கதையின் முடிவு குகன்
அவர் சொன்னவை கரிச்சான் குஞ்சு
இலட்சியவாதி ஆர்.சண்முக சுந்தரம், ஆர். திருஞான சம்பந்தம்
எனது ஆசிரியர் கி. ரங்கராஜன்
மறுமலர்ச்சிப் பரிதி கு.ப.ரா இராஜ அரியரத்தினம்
கதை மன்னன் கு.ப.ரா. சி. வைத்தியலிங்கம்
குணத்திற்கு ஒருவர் கு.ப.ரா. சோ. சிவபாத சுந்தரம்
பெருந்துணை போயிற்று சாலிவாகனன்
விளக்கேற்றி வைத்தவர் லா.ரா.க.
மறவாத முகம் தி.ஜ. ர.
ஆரம்ப எழுத்தாளர்களும், கு.ப.ரா.வும் எம்.வி. வெங்கட்ராம்
சிறுகதை கு.ப. ராஜகோபாலன்
கு.ப.ரா.வும் கரிச்சானும் தி. ஜானகிராமன்
கு.ப.ரா. சந்திப்பு வல்லிக்கண்ணன்

உசாத்துணை


✅Finalised Page