under review

பதினோராம் திருமுறை

From Tamil Wiki
Revision as of 09:47, 4 October 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பதினோராம் திருமுறை

பதினோராம் திருமுறை பன்னிரு ஆசிரியர்களால் பாடப்பெற்ற நாற்பது சிற்றிலக்கியங்களின் தொகுப்பு நூல். இத்திருமுறை சைவப் பிரபந்தமாலை அல்லது சைவப்பிரபந்த திரட்டு என அழைக்கப்படுகின்றது.

நூல் பற்றி

இதில் நாற்பது பதிகங்கள் அடங்கியுள்ளன. இதில் தேவார ஆசிரியர்கள் காலத்துக்கு முற்பட்ட நூல்களும் இணைக்கப்பட்டுள்ளன. விநாயகர் வழிபாட்டு நூல்கள் சில இத்திருமுறையில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் சைவ அடியவர்களாகிய கண்ணப்பர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர்மீது பாடப்பட்ட பதிகங்களும், சிற்றிலக்கியங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சிவன் சிறப்புரைக்கும் திருமுறைகள் பதினொன்றாகத் தொகுக்கப்பட்டன. சைவ அடியவர்கள் குறித்த இலக்கியங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அடியார் சிறப்புரைக்கும் பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்

திரு ஆலவாய் உடையார் பாசுரங்கள்
  • திருமுகப் பாசுரம் (1)
காரைக்கால் அம்மையார் பாசுரங்கள்
  • திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - 1 (2-12)
  • திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - 2 (13-23)
  • திரு இரட்டை மணிமாலை (24-43)
  • அற்புதத் திருவந்தாதி (44-144)
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாசுரங்கள்
சேரமான் பெருமாள் நாயனார் பாசுரங்கள்
நக்கீரதேவ நாயனார் பாசுரங்கள்
கல்லாடதேவ நாயனார் பாசுரங்கள்
கபிலதேவ நாயனார் பாசுரங்கள்
  • மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை (515-534)
  • சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை (535-571)
  • சிவபெருமான் திருவந்தாதி (572-671)
பரணதேவ நாயனார் பாசுரங்கள்
  • சிவபெருமான் திருவந்தாதி (672-772)
இளம்பெருமான் அடிகள் பாசுரங்கள்
  • சிவபெருமான் திருமும்மணிக்கோவை (773-802)
அதிராவடிகள் பாசுரங்கள்
  • மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை (803-825)
பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள்
  • கோயில் நான்மணிமாலை (826-865)
  • திருக்கழுமல மும்மணிக் கோவை (866-895)
  • திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (896-925)
  • திருஏகம்பமுடையார் திருவந்தாதி (926-1025)
  • திருவொற்றியூர் ஒருபா ஒருபது (1026-1035)
நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்
  • திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை (1036-1055)
  • கோயில் திருப்பண்ணியர் விருத்தம் (1056-1125)
  • திருத்தொண்டர் திருவந்தாதி (1126-1215)
  • ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி (1216-1316)
  • ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் (1317-1327)
  • ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை (1328-1357)
  • ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை (1358)
  • ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் (1359-1407)
  • ஆளுடையபிள்ளையார் திருத்தொகை (1408)
  • திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை (1409-1419)

உசாத்துணை


✅Finalised Page