under review

கதைக்கோவை – தொகுதி 4

From Tamil Wiki
Revision as of 19:24, 8 January 2024 by ASN (talk | contribs) (Page Created; Para Added, Image Added: Table Added: Writers Name and Short Stories Name Added; Link Created: Proof Checked)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கதைக்கோவை - தொகுதி 4

கதைக்கோவை – தொகுதி 4 (1945), அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு, பிற நான்கு தொகுதிகளுடன் இணைந்த புதிய பதிப்பாக, ஐந்து தொகுதிகள் கொண்ட ஆறு நூல்களாக, 2019-ல், அல்லயன்ஸ் பதிப்பகத்தால் மீள் பிரசுரம் செய்யப்பட்டது.

பிரசுரம், வெளியீடு

கதைக்கோவையின் நான்காவது தொகுதி, 75 எழுத்தாளர்களின் 75 சிறுகதைகளுடன் 1945-ல் முதல் பதிப்பாக வெளிவந்தது. 74 ஆண்டுகளுக்குப் பின், 2019-ல் கதைக்கோவையின் ஐந்து தொகுதிகளும், புதிய மீள் பதிப்பாக, ஆறு நூல்களாக அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன.

கதைக்கோவை – நான்காவது தொகுதி

கதைக்கோவையின் நான்காவது தொகுதி, 75 எழுத்தாளர்களின் 75 சிறுகதைகளுடன் வெளியானது.

உள்ளடக்கம்

கதைக்கோவையின் நான்காவது தொகுதியில் கீழ்காணும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றன.

எண் எழுத்தாளர் சிறுகதை
1 ர. அய்யாசாமி, எம்.ஏ இன்ப வேட்கை
2 ஜே. அனந்த விஜயம் குலத் தொழில்
3 கரிச்சான் குஞ்சு சஞ்சீவினி
4 ம.சீ. கல்யாணசுந்தரம், பி.ஏ. குடும்ப தர்மம்
5 சூ.பா. கல்யாணராமன் அறுந்த காற்றாடி
6 கஜமுகன் மறுமலர்ச்சி
7 அ.வெ.ரா. கிருஷ்ணஸ்வாமி தீர்ப்பு
8 ஸ்ரீதரம் குருஸ்வாமி மன்னி
9 என்.ஆர்.கேதாரிராவ், எம்.ஏ., எல்.டி. வீரவெங்கிட்டு
10 வி.சி.கோபாலரத்னம், பி.ஏ., பி.எல். பட்-பட்-பட்
11 கி.ரா. கோபாலன் சாந்தி எங்கே?
12 கோபு தீபாவளி எப்படி?
13 சகுந்தலா ராஜன் பச்சைச் சேலை
14 வெ. சந்தானம் மைதிலியின் கலக்கம்
15 ஆர்.கே.சாமி இருஜீவன்கள்
16 சாவி நினைத்ததும் நடந்ததும்
17 டாக்டர் அ.சிதம்பரநாத செட்டியார், எம்.ஏ. பரவாயில்லை
18 தொ.மு. சிதம்பர ரகுநாதன் புத்துயிர்
19 வி.எஸ். சுந்தரராஜன் சிற்பியின் மனம்
20 எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் வேங்கை வீரன்
21 பாலபாரதி ச.து. சுப்பிரமணிய யோகி குளத்தங்கரைக் குயில்கள்
22 சௌந்தரம் தனக்கு வந்தால் தெரியும்
23 கே.ஞானாம்பாள், எம்.ஏ. பயன் என்ன?
24 திருலோக சீதாராம் மனமகிழ்ச்சி
25 என். நாகராஜன் உமார்
26 தா. நாகலிங்கம் கம்பி மத்தாப்பு
27 க.நாராயணன் எதிர்பாராதது
28 வே. நாராயணன், எம்.ஏ., எம்.எல். அவளும் அவனும்
29 கே.எஸ். நாராயணஸ்வாமி சோதனை
30 பகீரதன் மருதநாயகத்தின் மனோரதம்
31 ஏ.எஸ். பஞ்சாபகேச ஐயர், எம்.ஏ., ஐ.ஸி.எஸ். முடிவு
32 பட்டு சரோஜாவின் கிளி
33 கு.பாலசுப்பிரமணியன் உத்தியோக சித்தி
34 கி.வா. பாலசுப்பிரமணியன் பாசம்
35 எம்.என்.எம். பாவலர் நச்சுப் பல்
36 பூச்சி மறுமலர்ச்சி
37 பெருசு உனக்காக உயிர் வாழ்வேன்
38 ய. மகாலிங்க சாஸ்திரி, எம்.ஏ., பி.எல். சீதாவின் சுயம்வரம்
39 எஸ். மாரிச் செட்டி, பி.ஏ. (ஆனர்ஸ்) வாழ்வு மலர்
40 கி. முத்துஸ்வாமி குலதெய்வம்
41 பி.கே. முத்துஸ்வாமி வெள்ளமும் உள்ளமும்
42 வே. ரங்கராஜன் கலையும் காதலும்
43 ரஸிகன் பலாச்சுளை
44 வி. ராதாமணி குழந்தையின் கவலை
45 எஸ்.எஸ்.ராமசாமி, பி.எஸ்.ஸி., பி.எல். நாடக வாழ்க்கை
46 வெ. ராமராவ் அன்பின் அழைப்பு
47 திவான்பகதூர் கே.எஸ். ராமஸ்வாமி போனதுபோல் வந்தான்
48 எஸ்.ஏ. ராமநாதன் என் கிளி
49 எஸ். ராமாநுஜன் வாழ்க்கையில் குறை
50 எஸ்.என். ராமு ரகுபதியின் சகோதரன்
51 ராஜ்யஸ்ரீ இருண்ட பாதை
52 ஆர்.எஸ். ருக்மிணி, எம்.ஏ. பெண் ஜன்மம்
53 பி.என். லக்ஷ்மி, பி.ஏ. அன்பா? இரக்கமா?
54 ஏ.எஸ். லக்ஷ்மி மன்னிப்பு
55 வி. லோகநாதன் நழுவி விழுவானேன்?
56 வஸந்தன் தூங்கா விளக்கு
57 எஸ். விசாலாக்ஷி வருஷப்பிறப்பு
58 ல.ரா. விசுவநாத சர்மா மின்னல் கொடி
59 விந்தன் கண்ணம்மா
60 எஸ். வேங்கடசுப்பிரமணியன் இருவேறுலகம்
61 எம்.வி. வேங்கடராமன், பி.ஏ. இந்திராணி
62 ஏ.ஜி. வேங்கடாசாரி, பி.ஏ. ரங்கூன் கமலம்
63 சி.ஸ்ரீ. வேங்கடேசன் வாழ்க்கை ஒரு கனவா?
64 வ. வேணுகோபாலன் சிற்பியின்தியாகம்
65 கே. வைத்தியநாதன் சோப்புக்காரி
66 ஆர். ஜகந்நாதன், எம்.ஏ. பாணிக்கிரகணம்
67 டி.எம்.ஜம்புநாதன் சாந்தி
68 கே.எஸ். ஜம்புநாதன் நப்பாசை
69 ஆ.வெ.ஜெயராமன் பெரிய இடத்துச் சமாசாரம்
70 தி. ஜானகிராமன் கமலியின் குழந்தை
71 கே. ஸ்ரீநிவாஸ், பி.ஏ. என் தோட்டம்
72 ரா. ஸ்ரீநிவாஸன் அவியாச்சுடர்
73 கா.மு. ஷெரீப் கடமை
74 ஸத்யதாமா குழந்தையின் பிரார்த்தனை
75 ஹரிணி தெய்வப் பெண்

மதிப்பீடு

கதைக்கோவை தொகுதிகள், புதிய கருப்பொருள்களைக் கொண்ட சிறுகதைகளைப் படைத்த பல எழுத்தாளர்களை கவனப்படுத்தின. எழுத்தாளர்களும், அவர்களுடைய படைப்புகளும் வாசக கவனம் பெறக் காரணமாயின. கதைக்கோவைத் தொகுதி நான்கு பற்றி, மேயர் எம். ராதாகிருஷ்ணப்பிள்ளை, “வாழ்க்கையிலே நிகழும் சிக்கல்கள், சுவைப்பதற்குரிய முரண்பாட்டு நயம், விதியின் வலிமை, மேலோங்கி நின்று முடிக்கும் முடிவுகள், ஆண், பெண் தொடர்பு விநோதங்கள், தியாகத்தின் பரிணாமங்கள், தீய உள்ளத்தின் கோணல்கள், வறுமையின் அலங்கோலக் காட்சிகள், பொறாமையின் விளைவுகள் என்ற பலபல வேறுபாட்டு நயமுள்ள பொருள்களை மூலக் கருவாகக் கொண்ட கதைகள் இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நடை.” என்று மதிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.